அரையிறுதியில் தமிழகம்: 'கூச் பெஹார்' டிராபியில்
தேனி: 'கூச் பெஹார்' டிராபி அரையிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. காலிறுதியில் 48 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வென்றது.
தேனியில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) மைதானத்தில் நடந்த 'கூச் பெஹார்' டிராபி (19 வயது) காலிறுதியில் (4 நாள் போட்டி) 'நடப்பு சாம்பியன்' தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 305, சவுராஷ்டிரா 287 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் தமிழக அணி, 2வது இன்னிங்சில் 177/9 ரன் எடுத்து, 195 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் தமிழகத்தின் பரத் அரைசதம் கடந்தார். தமிழக அணி 2வது இன்னிங்சில் 196 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பரத் (51) அவுட்டாகாமல் இருந்தார்.
பின், 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணிக்கு வன்ஸ் ஆச்சார்யா (36), நமன் கோடக் (26) ஓரளவு கைகொடுத்தனர். ஜெய் ரவாலியா (50*) அரைசதம் எட்டினார். சவுராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 166 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
தமிழகம் சார்பில் சுழலில் அசத்திய பி.கே. கிஷோர் (6 விக்.,), ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
மேலும்
-
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி
-
நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்
-
மக்கள் கூடும் இடங்களில் மதுக்கடைகளை மூடணும்: பா.ம.க., ராமதாஸ் கோரிக்கை
-
இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இல்லை
-
பொங்கல் பரிசு ரூ.3,000 'டாஸ்மாக்'கிற்கு திரும்பும்