வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நிறைவு; 9.14 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு
சென்னை: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக, நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம் நிறைவு பெற்றுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த டிசம்பரில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர்.
இதையடுத்து, தகுதியான வாக்காளர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும் சேர்க்க, டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, நேற்றும், இன்றும் (ஜன.4) மீண்டும் சிறப்பு முகாம்கள் நடந்தன.
நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். நேற்று(ஜன.3) வரை, 9.14 லட்சம் பேர் மனு அளித்துள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
எல்லா டாக்குமென்ட்களை கொடுத்தும் என்னுடைய பெயரை நீக்கி விட்டதாக பி எல் ஓ கூறியுள்ளார். ஒருவேளை நான் பிஜேபிக்கு ஓட்டு போடுவேன் என்பதால் என் பெயர் நீக்கப்பட்டுள்ளதோ.
எனக்குத் தெரிந்து சென்னை மாவட்டத்தின் ஒரு பள்ளியில் நடந்த சிறப்பு முகாமில் அப்படி ஒரு முகாம் தேர்தல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது என்ற அறிவிப்பு ஒட்டப்படாமல் நடத்தப்பட்டது மாறாக திமுகவினரால் நடத்தப்படுகின்ற முகாம் என்பது போன்ற தோட்டத்தில் திமுகவினர் பதாகை வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதன் வீடியோ இங்கே பதிவிட முடியவில்லை
நன்று நன்றி வணக்கம்மேலும்
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்