இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி பெருமிதம்
ஆமதாபாத்: சோம்நாத் கோவிலில் பறக்கும் கொடி இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவில் மீது 1026 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஜனி முகமது தாக்குதல் நடத்தி, ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்து சென்றார். அதன் பின், முகலாய ஆட்சியாளர்களால் பலமுறை கோவில் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு பின், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோம்நாத் கோவில் கம்பீரமாக நிற்கிறது.
இதை நினைவு கூரும் வகையில் சோம்நாத் பெருமித திருவிழா நடக்கிறது. இதையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதனால் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் சென்றார். கோவிலில் நேற்றிரவு அவர் சாமி தரிசனம் செய்தார்.
இன்று நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க திறந்த வாகனத்தில் சென்ற பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த மக்கள் வரவேற்றனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி உடன் இருந்தனர். குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: நமது முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோம்நாத் கோவிலுக்காக தங்களது உயிரை தியாகம் செய்தனர். இந்த சூழ்நிலையும், இந்த சந்தர்ப்பமும் தெய்வீகமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். நான் உங்களுடன் உரையாடும் போது எனக்கு மீண்டும், மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சூழல் எப்படி இருந்திருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோம்நாத் கோவிலில் கொடியேற்றப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவின் சக்தியையும், திறன்களையும் முழு உலகிற்கு எடுத்துரைக்கிறது. கோவிலை அழித்ததன் மூலம் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகப் படையெடுத்தவர்கள் நினைத்தார்கள்.
ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது. சோமநாதரின் கதை இந்தியாவின் கதை. அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
@block_Y@
டிரம்ஸ் வாசித்த மோடி!
சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடியை வரவேற்க கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிரம்ஸ் வாசித்து வரவேற்ற கலைஞர்களை மோடி பாராட்டினார். அவர்களுடன் இணைந்து சிறிது நேரம் டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்தார். இதனை கண்ட இசை கலைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்.block_Y
வாசகர் கருத்து (8)
SUBBU,MADURAI - ,
11 ஜன,2026 - 15:59 Report Abuse
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் சோமநாதர் ஆலயம் கம்பீரமாக நிமிர்ந்து நின்று, நம்பிக்கையில் வேரூன்றிய ஒரு சனாதன இந்து நாகரிகம்
வீழ்ச்சியடைவதில்லை, மாறாக அது மேலெழுந்து நிற்கிறது என்று உலகுக்குச் சொல்கிறது. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
11 ஜன,2026 - 13:01 Report Abuse
கஜினி முகமத் என்ற ஆப்கானிய காட்டான் சோமநாதர் கோவில் மீது படை எடுத்த 1000 ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் வரலாறு,
1 கஜினி என்ற துருக்கிய, ஆப்கானிய காட்டான் 1026 ம் ஆண்டு சோமநாதர் கோவிலை தனது 15 ஆவது படை எடுப்பின் போது அழித்தான். அப்போது பல சமூகத்தை சேர்ந்த 50000 பேர் அந்த கோவிலை காப்பதற்காக தங்கள் உயிரை 3 நாள் போரில் உயிரை இழந்தனர். கோவில் பூசாரி பண்டிட் இறைவனை காப்பாற்ற இறைவன் தலையில் தனது தலையை வைத்து கபால மோக்ஷம் அடைந்தார். காட்டான் கஜினி, அவரது தலையை இறைவன் தலையில் மூலம் தனது வாளால் வெட்டினான். ஹிந்துக்களின் வழக்கப்படி மரணம் என்பது ஒரு பயணமே. ஆன்ம அடுத்த உருவம் அடையும்.
2 அங்கு அழிக்கப்பட்ட சோமநாதர் சிலையின் ஒரு பகுதி 950 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குஜராத்திய குடும்பத்தால் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 1925 சமயத்தில், அந்த குஜராத்திய குடும்பம் சிலையின் பகுதியை காஞ்சி பெரியவரிடம் எடுத்து செல்ல இப்போது நேரம் சரியில்லை. இன்னும் 100 ஆண்டுகள் கழித்து எடுத்து வாருங்கள் அதற்கு நல்ல வழி பிறக்கும் என்று சொன்னார். அதே போல அந்த சிலையின் பகுதி 11 சிவ லிங்கங்களாக சுவாமி ரவி ஷங்கர் அவர்களால் மாற்றப்பட்டு இப்பொது இந்தியா முழுவதும் அந்த சிலை பயணம் செல்கிறது.
3 இந்த சிலையின் சிறப்பு என்ன வென்றால் அது தரையில் ஒரு பகுதியில் நிற்பதில்லை. சுழன்று கொண்டே இருக்கும். தரைக்கு மேற் பகுதியில் 3 - 4 இன்ச் இடை வெளியில் பூமிக்கு மேற்புறம் நிற்கும்.
4 சோமன் என்பது சந்திரனை என்னும் மனத்தை குறிக்கும். எனவே ஒருவன் மனதை கட்டுப்படுத்தினால் இறைவனை அடையலாம் என்பதே அதன் தத்துவம்.
5 சோமநாதர் கோவிலை தாண்டி முழுவதும் கடல் பகுதி. அதை தாண்டினால் அண்டார்டிக் என்ற பனி துருவம் மட்டுமே உள்ளது. இந்த நில பகுதியை தாண்டி நிலமே இல்லை என்று அந்த கோவிலில் 1000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுதி வைத்து உள்ளனர். அந்த அளவு நிலப்பகுதி பற்றிய அறிவு மக்களுக்கு இருந்து இருக்கிறது.
6 சோமநாதர் கோவிலை திரும்ப கட்டுவதற்கு சர்தார் படேல் முயற்சி செய்யும் போது அதை நேரு கடுமையாக எதிர்த்தார். ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். போலி செகுலரிஸ்ம் என்பதை முதலில் கொண்டு வந்த பெருமை அவரையே சேரும். ஆனால் அவர் பாபரின் ஆப்கானிய சமாதிக்கு சென்றார். இதுதான் வரலாற்று உண்மை.
7 நேரு சோமநாதர் கோவில் கஸ்னி முஹம்மதுவால் அழிக்கப்படவில்லை என்று வாதாடினார். அதனால் பாகிஸ்தானிய பிரதமர் லியாகத் கானால், அவரது இஸ்லாமிய சமூக ஆதரவுக்காக அப்போது பாராட்டப்பட்டார்.
8 கடந்த 75 ஆண்டுகளில் வரலாறு மாற்றி எழுதபட்டது. கஸ்னி முகமத் மிக பெரிய வீரனாக வரலாற்றில் எழுத்தப்பட்டான். ஆனால் அவன் சோமநாதர் படையெடுப்புக்கு பின்னால் திரும்ப ஆப்கானிஸ்தான் செல்லும் போது, அவனும் அவனது படை வீரர்களும் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் தண்ணீரை காண்பிக்கிறேன் என்று குஜராத், ராஜஸ்தான் பாலைவனத்துக்குள் இழுத்து செல்லபட்டு அலைக்கழிக்கப்பட்டான். தண்ணீர் கிடைக்காமல் அவன் அலையும் போது அந்த சிறுவன் கஸ்னியை பார்த்து நீ எங்கள் தெய்வத்திற்கு அவமானம் செய்தாய் நீ இப்போது அதன் பயனை அனுபவிக்கிறாய் என்று சொல்லி தண்ணீர் இல்லாத பாலைவனத்தில் அவனையும் படைகளையும் அழிவிற்கே கொண்டு சென்றான்.
9 சிந்து பகுதியை சேர்ந்த ஹிந்து அரசர்கள் கஸ்னியின் படையை எதிர்கொண்டு அவனது படைகளை துடைத்து தள்ளினர். உயிரை பிடித்து கொண்டு கஸ்னி மொஹம்மத் ஆப்கானிஸ்தானிற்கு தப்பி சென்றான். அடுத்த 250 வருடங்கள் அவனது வம்சம் இந்திய பக்கமே வர முடியாத அளவு அந்த சேதம் அவர்களுக்கு உண்டானது. 0
0
naranam - ,
11 ஜன,2026 - 13:50Report Abuse
அருமையான வரலாறு இது.. அமெரிக்காவில் வசித்தாலும் இதை இங்குள்ள இந்தியர்களுக்கு எடுத்துச் சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 0
0
Kesavan Subramanian - ,
11 ஜன,2026 - 14:34Report Abuse
மிகவும் அருமை 0
0
SUBBU,MADURAI - ,
11 ஜன,2026 - 15:44Report Abuse
நல்ல பதிவு அருமை! 0
0
Chess Player - ,இந்தியா
11 ஜன,2026 - 15:58Report Abuse
அருமை. அருமை
உண்மையை உரக்க சொல்லுவோம் 0
0
Thravisham - Bangalorw,இந்தியா
11 ஜன,2026 - 18:26Report Abuse
நீங்கள் சொல்வதில் ஓர் 40 சதவிகிதம் மட்டுமே கோவிலின் light & sound ஷோல ஒளிபரப்புகிறார்கள். சோம்நாத் ஆலயத்தின் ஆர்த்தி மிகவும் இனிமை. வெறும் இரண்டே வாத்தியங்கள் மட்டுமே உபயோகித்து. 0
0
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
11 ஜன,2026 - 21:55Report Abuse
நல்ல பதிவு .நன்றி நன்றி 0
0
Reply
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
Advertisement
Advertisement