திருமாவை பொது தொகுதியில் ஆளும் கட்சி நிற்க வைக்குமா? சீமான் கேள்வி
காரைக்குடி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடியில் நேற்று அளித்த பேட்டி:
நான்கரை ஆண்டாக போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தலின்போது ஓய்வூதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இது, தி.மு.க., அரசின் ஓட்டு அறுவடை என்பதை காட்டுகிறது. உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், முன்னரே அறிவித்திருக்க வேண்டும்.
இந்த அறிவிப்பால், மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படும். துாய்மை பணியாளர்கள் நீண்ட நாட்கள் போராடி வருகின்றனர். அவர்களின் நிலை என்ன? அரசுக்கு வரி, மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே உள்ளது.
தி.மு.க., அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றும், மாநிலத்தில் எந்த திட்டமும் சிறப்பாக நிறைவேறவில்லை. பள்ளி, கல்லுாரி வாசல் வரை போதை பொருட்கள் விற்பனை சென்றுவிட்டது. வட மாநில இளைஞர்கள் வருகையும், தமிழகத்தில் போதை பொருள் வர காரணமாக உள்ளது.
கூட்டணிக்கு வந்தால், ஆட்சியில் பங்கு தருவதாக கூறுவது த.வெ.க., தலைவர் விஜயின் பெருந்தன்மை. அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாழ்த்தப்பட்டவர்களை முக்கிய பதவிகளில் அமர வைத்து அழகு பார்த்தார். அதை, தி.மு.க., அரசு செய்யுமா? விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை, பொது தொகுதியில் நிற்க வைக்குமா? இவ்வாறு அவர் கூறினார்.
I am ready to vote you provided you must give us an assurance if in case of any looting by you or your party member does it ...there should be a self declaration of resignation to be given to the State governer
First let NTK win a councellor seat, after that he can talk about thiruma.
இந்தியாவில் இப்படி தலித்துகளை பொது தொகுதியில் நிற்க வைத்தது பாஜக மட்டுமே
என்னப்பா இது டக்குன்னு பார்த்தால் சைடு போஸில் சீமான் அதானி மாதிரி இருக்காரு. ஒருவேளை அவ்வளவு காசு சேர்த்திருப்பாரோ?
திருமாவை பொது தொகுதியில் ஆளும் கட்சி நிற்க வைக்குமா?. அதெல்லாம் இருக்கட்டும், ஒவ்வொரு தேர்தல்களிலும் உன்னை பின்தொடரும் தற்குறி இளைஞர்களின் கட்டுமர திருட்டு திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்து மீண்டும் கட்டுமர திருட்டு திமுக ஆட்சிக்கு வர உதவுறியே, அதை எப்போ நிறுத்த போற?
திருமா பொது தொகுதியில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது.
தனி தொகுதி மற்றும் சாதிய இட ஒதுக்கீடு இருக்கும் வரை இந்து மத மக்கள் ஒற்றுமை குறையும். தேச பற்று வளராது. சாதி அரசியல் நிலை பெற்று வளரும். தாய், தந்தை கல்வி அடிப்படையில் பொருளாதார இட ஒதுக்கீடு மட்டும் தேவை. நாடு முழுவதும் ஒரு சட்டம் கீழ் கொண்டுவர வேண்டும். மாநில போலீஸ் துறையை நீக்கி, மாகாண, தேசிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்க வேண்டும். தேர்தலில் பொது தொகுதி மட்டும்.
உக்காருவதற்கே பிளாஸ்டிக் சேர் கொடுத்தவனுவோ பொது தொகுதி எப்படி கொடுப்பானுவோ...
நீ பிழைக்கிற வழிய பாரு மத்தவங்க என்ன பண்ணனும்னு அவங்களுக்கு தெரியும் உன் பாடு திண்டாட்டம் தேவையில்லாத கேள்வி கேட்கிறேன் ...
அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை.....
நீயும் சொம்பு தூக்கிட்டு ஓடி வராதே....அவுங்க பார்த்துபாங்க
பொது தொகுதியில் நின்றால் வெற்றி கிடைக்காது சாதிய கட்சி
முத்திரை மறைந்து விடும்
ஆக வைச்சி செய்யும் தி.மு.க
திருமா பொறியில் சிக்கிய எலிமேலும்
-
தமிழகத்தில் இன்று 12 மாவட்டம், நாளை 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
-
ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
கரூர் சம்பவம்; விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
-
பாஜ கூட்டணியால் ஜெயித்தோம் என்ற எண்ணம் அதிமுகவுக்கு வரணும்: ரங்கராஜ் பாண்டே
-
உண்மையான ஜனநாயகன் நான் தான்; சொல்லி வேதனைப்பட்ட சீமான்
-
நமது இளைஞர் சக்தி வலிமையானது: பிரதமர் மோடி பெருமிதம்