ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
நமது டில்லி நிருபர்
ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது.
'நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், நேற்று (ஜனவரி 09) தியேட்டர்களில் வெளியாகும்' என படக்குழு அறிவித்திருந்தது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சென்சார் போர்), படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இந்த பிரச்னை காரணமாக 'ரிலீஸ்' நிறுத்தி வைக்கப்பட்டது.
பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக் ஷன்ஸ் சார்பில், தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆஷா, ''தணிக்கை சான்று வழங்க வேண்டும். மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்து வழக்கை, ஜன.21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
'ஜனநாயகன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் விரைவில் விசாரணைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் எல்லாம்ஓர் தலைவன். அம்மா முன் அடங்கி ஒடுங்கி நின்றதெல்லாம் மறந்து போச்சோ?
சென்சார் போர்டு படத்திற்கு சான்று வழங்கும் முன்பு அந்த படத்திற்கான காசு எங்கிருந்து வருகிறது என்று பார்க வேண்டும் முறை கேடு டானா முதலிடு தவிர்க்க படலாம்
தணிக்கை குழு சில நிர்வாக அடிப்படையில் செயல்படும். நிர்வாக முறைகளில் நீதிமன்றம் அதிகம் தலையிட்டு காலப்போக்கில் தன் மாண்பை மக்களிடம் இழந்து விடும். தேசத்திற்கு எதிராக தவறான கதைகளை பரப்ப அரசியல், சாதி மத பிரச்னை நுழைத்து நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்று வருகிறார்கள். தணிக்கைக்கு உட்படும் காட்சிகளை நீக்குக. படம் மொத்தம் சான்று தரவில்லை என்றால் மன்றம் நாடலாம்.
500 கோடி என்பது அந்த டக்ளஸ் சொன்ன 30000 கோடியில் 60ல் ஒரு பங்கு. இதற்க்கு இவ்வளவு அலட்டலா...
"ஜனநாயகம்" திரைப்படம், மே மாத இறுதி வரை வெளி வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
Hello Mr. Vijay, Your political criticism are too extreme , I am not a DMK or supporter of DMK but I do not see the government ruling is that bad , ye
உச்ச நீதிமன்றம் முதலில் உயர் நீதிமன்றத்தை 21 தேதி முடிச்சிட்டு வா என்று இந்த மனுவை தள்ளுபடி
செய்யும் இதான் நடைமுறை அணில் கூட்டதிற்கு அறிவு அவ்வளவே
இந்த ஜனநாயகன் படத்தை அப்றம் பாத்துக்கலாம்....
நேற்று முதல் பராசக்தி
படம் தொடர்பாக வந்து கொண்டிருக்கும் விமர்சனங்கள் மனதுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. திராவிடம் மட்டுமல்ல, திராவிடத்தை போற்றும் சினிமா படங்கள் தோற்றாலும் அது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
காட்சியை வைத்து கட்சி நடத்தும் கேவல கும்பல். இதற்கு ஒரே காரணம் குருவி சினிமா
படத்திற்கு தடை, CBI நேர்முக விசாரணை ... எங்கேயோ இடிக்குதே ... இல்லே இல்லே பிஜேபி ரொம்ப நல்ல கட்சி . நம்புங்க மக்களே
நீ முதல்லே முக்காடு போட்டு போலி பெயரில் ஊளையிடுவதை நிறுத்து.
உன்னையவே தமிழன்னு நாங்க நம்பும் போது அதை நம்பித்தானே ஆக வேண்டும்!
எங்கும் இடிக்கல..விஜய்மீது கரூர் சம்பவத்தில் முடித்துவிட பார்த்தபோது எவறும் ஆதரவு கரம் நீட்டா சமயம் சட்டமன்றத்தில் விஜய்க்காக வாதாடிய கட்சி அஇஅதிமுக. அன்று அஇஅதிமுக தலையிடாவிட்டால் திமுக விஜயை ஒரு வழி பண்ணியிருக்கும்.வீட்டிலேயே முடங்கி கிடந்தவர் வெளியே வந்து ஒரு சிறு நன்றிகூட அஇஅதிமுகவிற்கு சொல்லாமல் மீண்டும் சினிமா வசணம்தான் பேசினார்.அவருக்கான நெருக்கடி பிரட்சினையை அவர்தானே பார்த்துக்கனும்.
கலிகாலம் என்று ஹிந்துக்கள் கூறுவார்கள்மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!