மாற்றங்களை விரும்பியவர் ஏ.வி.எம்.சரவணன்: முதல்வர்
சென்னை"“காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர, ஏ.வி.எம்.சரவணன் ஆர்வம் காட்டினார்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சமீபத்தில் மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி, சென்னை விரும்பாக்கத்தில் நேற்று நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நான் சென்னை மேயராக இருந்தபோது, கடற்கரையில் நடைபயிற்சிக்கு செல்வேன். அப்போது ஏ.வி.எம்.சரவணன் தன் நண்பர்களுடன் வருவார். நான் அடிக்கடி அவரை சந்தித்து பேசுவேன். சென்னையை எப்படி மேம்படுத்த வேண்டும் என, அவர் எனக்கு அறிவுரைகளை கூறியுள்ளார்.
காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என, ஏ.வி.எம்.சரவணன் ஆர்வம் காட்டினார்.
இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினி, கமல், கவிஞர் வைரமுத்து, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, ஹிந்து குழும இயக்குநர் என்.ராம், அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.