அ.தி.மு.க.,வில் நேர்காணல் தேதி மாற்றம்

அ.தி.மு.க., சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட, 10,175 பேர் விருப்ப மனுக்கள் வழங்கி உள்ளனர். அவர்களுக்கான நேர்காணல், வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை, சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க இருந்தது.

இந்நிலையில், வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த மாவட்டங்களுக்கான நேர்காணல், முறையே வரும் 12 மற்றும் 24ம் தேதி களுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Advertisement