421 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 421 பேருக்கு, 3.46 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதி-வேந்தன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய-தாவது: தமிழகம் வளர்ந்த மாநிலங்களில் ஒன்-றாக திகழ்கிறது. கொரோனா காலத்தில், மாண-வர்களின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக கொண்டு வந்த திட்டம் தான் 'இல்லம் தேடி கல்வி'. மகளிருக்கான மகளிர் உரிமை தொகை, மகளிர் விடியல் பயண திட்டம், அதேபோல் தற்-போது மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், அவர்களது வசிப்பி-டங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் 'உங்க கனவ சொல்லுங்க' திட்டம். மாணவ, மாணவியர் முன்னேறி, எதிர்காலத்தில் சமுதாயத்தில் சாதனை படைப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விளையாட்டு, கல்வி என அனைத்திலும் மாணவியர் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
பல்வேறு துறைகள் சார்பில், 421 பேருக்கு, 3.46 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உத-விகள் வழங்கப்பட்டன. துணை மேயர் பூபதி, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்-செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
பைனலில் சவுராஷ்டிரா-விதர்பா * விஜய் ஹசாரே டிராபியில்...
-
சென்னையில் உலக செஸ் * ஆனந்த் ஆசை
-
'கிராண்ட்மாஸ்டர்' ஆர்யன்
-
வங்கதேசம் செல்லும் ஐ.சி.சி., குழு * உலக கோப்பை பிரச்னைக்கு தீர்வு காண...
-
மீண்டும் வெல்லுமா இந்தியா * வங்கதேசத்துடன் பலப்பரீட்சை
-
டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அல்பலாஹ் பல்கலை., ரூ.139 கோடி மதிப்பு சொத்து முடக்கம்