திருடிய 60 பவுன் நகைகள் மீட்பு

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே அம்மாபட்டிணம் பகுதியை சேர்ந்தவர்கள் சீனீவாசன், தீபிகா. இவர்களின் வீட்டில் கடந்த ஆண்டு ஆக.,ல் 60 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் விசாரித்தனர்.

இதில் ஓடப்பட்டியை சேர்ந்த கணேசன் மீது சந்தேகத்தில் டிச.,28ல் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரிடம் இருந்து 60 பவுன் நகைகளை நேற்று மீட்டனர்.

Advertisement