உங்க கனவ சொல்லுங்க திட்டம் துவக்க விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி--பிளாக் தனியார் மகாலில் நடந்த நிகழ்ச்சியில்'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளிக்காட்சியில் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தில் மக்களின் கனவுகளை கேட்டு அவற்றை பதிவு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகள்நிறைவேற்றப்பட உள்ளன.

திட்டத்தின் கீழ் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வீடுகள் தோறும் செல்லும்களப்பணியாளர்களுக்கு படிவங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பாபு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரஇயக்கக மாவட்ட திட்ட செயலாக்க அலுவலர் கணபதி, மகளிர்சுயஉதவக்குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement