ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கொடியேற்றம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாயக்கன்-பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ராமலிங்க சவு-டேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று காலை கொடியேற்றத்துடன் வருடாந்திர திருவிழா துவங்கியது.


ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதத்தில் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்-துள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடப்பது வழக்கம். தொடர்ந்து 9 நாட்கள் திருவிழா நடக்கும். முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருவீதி உலா வரும், 14ம் தேதி நடை-பெறும். 15ம் தேதி பண்டாரம் கட்டுதல் மற்றும் அம்மனுக்கு சீர்வரிசையுடன் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெறும். 16ம் தேதி மஹா ஜோதி ஊர்வலம், தளிகை பூஜை நடைபெறும். 17ம் தேதி இறுதி நிகழ்ச்சியாக மஞ்சள் நீர் உற்சவம் நடை-பெறும்.

Advertisement