2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெறும் ஆர்.எஸ்.பாரதி சென்னிமலையில் கணிப்பு

சென்னிமலை: சென்னிமலையில் தி.மு.க., சார்பில், நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் தி.மு.க., அமைப்பு செய-லாளர் ஆஸ்.எஸ்.பாரதி பேசியதாவது: தியாகி குமரன் வாழ்ந்த இந்த மண்ணில், அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகில் இந்த கூட்டம் நடப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


அரசு ஊழியர்களின் சம்பள பிரச்னை முதல், மகளிர் உரிமைத்-தொகை திட்டம் வரை அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்-பட்டு வருகிறது. 'ஸ்டாலினால் கொடுக்க முடியுமா?' என்று பழ-னிசாமி கேட்டார். ஆனால், 28 மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வரும், 2026 சட்டசபை தேர்-தலில் தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெற்று, ஏழாவது முறை-யாக ஆட்சி அமைக்கும். ஸ்டாலினே மீண்டும் முதல்வராவார். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் கட்சி துணை பொது செயலாளரும் அமைச்சருமான சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்,

Advertisement