மணிக்கூண்டு பஸ் ஸ்டாப் அருகில் உதயம் காட்டன் ஷோரூம் திறப்பு

ஈரோடு: ஆண்களுக்கான வேட்டி, சட்டைகளின் பிரபல பிராண்டான, உதயம் காட்டன் ஷோரூம் திறப்பு விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. மணிக்கூண்டு பஸ் நிறுத்தம் அருகில் நேதாஜி சாலையில், உதயம் காட்டன் நிறுவனத்தின் இந்த ஷோரூம் திறக்கப்பட்டது.


ஈரோடு அக்னி ஸ்டீல்ஸ் தலைவர் சின்னசாமி வைத்தார். திண்டல் வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஈரோடு சண்முகா குரூப் சேர்மன், நிர்வாக இயக்குனர் ராஜமாணிக்கம் முதல் விற்ப-னையை பெற்று கொண்டார். உதயம் காட்டன் நிர்வாக இயக்-குனர் அருண் ஈஸ்வர் வரவேற்றார். இங்கு நவீன டிசைன்களில் ஆடை ரகங்கள் ஏராளமாக உள்ளன. அனைத்து வகை பருத்தி வேஷ்டி, சட்டை, திருமண பட்டு வேட்டி, சட்டை, குர்தா, பைஜாமா, ஒட்டிக்கோ-கட்டிக்கோ வேட்டி, சட்டைகள், ரெடிமேட் பாக்கெட் வேட்டி, விதவித நிறங்கள் மற்றும் வெள்ளை நிற சட்டை, டிஷ்யூ வேட்டி, சட்டை, சட்டை துணிகள், துண்டு, உள்ளாடைகள் உள்ளன. இந்த ஷோரூம் புதுமையுடன் பாரம்பரியத்தை பரப்பும் பய-ணத்தில் மற்றொரு மைல்கல் என்று, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement