ஞானானந்தகிரி சுவாமிகளின் 52 வது ஆண்டு ஆராதனை விழா
திருக்கோவலுார்: திருக்கோவிலுார், தபோவனம், சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகளின் 52 வது ஆண்டு ஆராதனை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுார் அடுத்த தபோவனத்தில் சஹஜ சமாதியில் அருள்பாலித்து வரும் ஞானசித்தர் சத்குரு ஞானானந்தகிரி சுவாமியின், 52 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த மாதம் 21ம் தேதி கணபதி ஹோமம், பாத பூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் விசேஷ பாத பூஜை, மணி மண்டபம் சத்குரு நாதர் சன்னதியில் மகா தீபாராதனை, அதிர்ஷ்டத்தில் 108 கலச அபிஷேகம், 1008 சங்காபிஷேகம், அலங்காரம் மகா தீப ஆராதனை நடந்தது.
நேற்று காலை 5:30 மணிக்கு விசேஷ பாத பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜைகள், மதியம் 1:30 மணிக்கு தீர்த்த நாராயண பூஜை, நாம சங்கீர்த்தனம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஞானானந்த தபோவன அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
உலகம் முழுவதும் திடீரென முடங்கியது எக்ஸ் தளம்: பயனர்கள் அதிருப்தி
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு