வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
புதுடில்லி: வளர்ச்சிக்கான எங்களின் சாதனையும், தொலைநோக்குப் பார்வையும் மஹாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
மஹாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது. மும்பை மாநகராட்சித் தேர்தலில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் 30 ஆண்டுகால தாக்கரே குடும்பத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்து இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றியை பாஜவினரும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர். இந் நிலையில், தேர்தல் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மஹாராஷ்டிரா மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;
மஹாராஷ்டிரா முழுவதும் அயராது உழைத்த ஒவ்வொரு தேசிய ஜனநாயக கூட்டணியின் தொண்டர்களை நினைத்து நான் மிகவும் பெருமை அடைகிறேன். எங்கள் கூட்டணியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து பேசியுள்ளனர்.
எதிர்காலங்களில் எங்களின் தொலைநோக்கு பார்வையை எடுத்துக் கூறி உள்ளனர். களத்தில் எதிர்க்கட்சிகளின் பொய்களை திறம்பட எதிர்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். மஹாராஷ்டிராவுக்கு நன்றி.
மக்களுக்கான நல்லாட்சி, சிறந்த நிர்வாகம் என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் செயலை மக்கள் ஆசிர்வதித்து உள்ளனர். பல்வேறு நகராட்சிகளின் தேர்தல் முடிவுகள்,மக்களுடனான பிணைப்பை மேலும் வலிமைப்படுத்தும் என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிக்கோளை உணர்த்துகிறது.
வளர்ச்சியை நோக்கிய எங்களின் சாதனைகள், முன்னேற்றத்தை நோக்கிய எங்களின் பார்வைகள் ஒருங்கே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கவும், மாநிலத்தின் புகழ்மிக்க கலாசாரத்தை கொண்டாடவும் கிடைத்த ஒரு அங்கீகாரம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.
@
மஹாராஷ்டிரா தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி பெற்ற மகத்தான வெற்றி, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சிக் கொள்கைகளில் மட்டுமே முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, மாநிலத்தில் மகாயுதி அரசால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகளுக்கு மக்கள் அளித்த ஒப்புதலின் முத்திரையாகும். மகத்தான ஆதரவளித்த மஹாராஷ்டிர மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் சொன்னது உண்மையாக இருந்தால் மிகவும் நல்லது. தமிழ்நாட்டுக்கு பாவக்கா இல்லாத தவேக வருவது நல்லது.
அரசியல் பல காலம் வெல்லாது.... அதுவும் காரியங்கள் சரியாக நடக்கும் வேளையில்....
அடுத்து தமிழகத்திலும் பாஜக வெற்றி நிச்சயம்.மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்