எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
சென்னை: ''எதிர்க்கட்சியினர், மொழி அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் மும்பை மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களது நோக்கத்தை மும்பை மக்கள் முறியடித்து விட்டனர்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மும்பை மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த முடிவானது,
மகாயுதி கூட்டணி அரசின் செயல்பாடுகள் மீதான மாபெரும் அங்கீகாரம். மூன்று இன்ஜின்களை கொண்ட நிர்வாகம் மூலம் உள்ளாட்சி முதல் பார்லிமென்ட் வரையிலான நடைமுறைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு குடிமகனுக்கும் வளர்ச்சி பணிகளை கொண்டு சேர்த்துள்ளதன் வெளிப்பாடுதான் இந்த தீர்ப்பு.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் சிறப்பான மாநில நிர்வாகம் ஆகியவை இந்த வெற்றியை உறுதி செய்துள்ளன.மக்கள் தங்கள் ஓட்டுக்களை அளித்ததன் மூலம் மாநில அரசுக்கு பரிசு வழங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சியினர், மொழி அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் மும்பை மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களது நோக்கத்தை மும்பை மக்கள் முறியடித்து விட்டனர்.
ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வளர்ச்சி உள்கட்டமைப்பு வேலைவாய்ப்பு ஆகியவை பற்றி பேசி மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது. மும்பை மக்கள், பிளவுபடுத்துவோரை புறக்கணித்து, சாராம்சத்துடன் பேசுவோரை ஆதரித்துள்ளனர்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மிகுந்த நேர்த்தியான பதிலடி பேச்சு..., சார் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நீங்க மல சார்
மத வெறி வென்றது மும்பையில். வேறொன்றுமில்லை.
பாஜக மட்டுமே நேர்மையான ஆட்சியை தருவார்கள் என்பதே உண்மை.
ஒரு சிறப்பான வெற்றியை வழங்கியமமைக்கு நன்றி
Annamalai Ji is a National leader TN miss you ji
இதைப்போன்று அடுத்து தமிழக மக்கள் ஹிந்துக்கள் எதிரி திமுகவை முற்றிலும் முறியடிக்கவேண்டும்.மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்