உலகம் முழுவதும் திடீரென முடங்கியது எக்ஸ் தளம்: பயனர்கள் அதிருப்தி

2

சான்பிரான்சிஸ்கோ: உலகம் முழுவதும் எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியது. இதனால் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர்.

உலகம் முழுவதும் பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் எக்ஸ் தளம் சர்வதேச அளவில் பெரும் தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்தது. இந்தியா மட்டும் அல்லாது உலகின் பல நாடுகளில் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இணையதள செயல்பாடுகளை கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் அமைப்பும், எக்ஸ் வலை தளம் முடங்கியதை உறுதிப்படுத்தி இருக்கிறது. எக்ஸ் வலைதள பக்கத்தில் உள்நுழைய முடியவில்லை, பக்கத்தை இணைக்கும் நேரம் முடிந்தது என்று சிக்கல்களை சந்தித்ததாக பயனர்கள் கூறி உள்ளனர்.

மேலும் முகப்பு பக்கத்தில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற செய்தியை பெறுவதாகவும் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் வலைதளம் இந்த வாரத்தில் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்வது இது இரண்டாவது முறையாகும். ஜன.13ம் தேதி இதேபோன்று சிக்கல்கள் ஏற்பட்டதாக இணையதள செயல்பாடுகளை கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் அமைப்பை பயன்படுத்தி பயனர்கள் புகார் அளித்தனர்.

Advertisement