சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி

5


புதுடில்லி: சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை இன்று (ஜன. 16) மத்திய அரசு முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


சட்டவிரோதச் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்து மக்கள் தவிப்பதை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டுச் சட்டம் அமலான பின், சட்ட விரோத சூதாட்ட செயலி மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.


ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தின்கீழ், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. ஆன்லைன் விளையாட்டுச் சட்டம் அமலான பின், இதுவரை 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத சூதட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோத தளங்களால் ஏற்படும் நிதி மற்றும் சமூகத் தீங்குகளைத் தடுப்பதற்கும் அரசு கொண்டுள்ள உறுதியை காட்டும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement