பொதுமக்களுக்கு இடையூறு 'குடி'மகன்களுக்கு எச்சரிக்கை


பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தனியார் மதுபான கடை உள்ளது. நேற்று இரவு, 8:00 மணிக்கு, இந்த தனியார் மதுபான பாருக்கு ஏராளமானோர் மது குடிக்க
சென்றுள்ளனர். மது குடித்துவிட்டு, அப்பகுதியில் செல்லும் பிரதான சாலையில் கும்பலாக போக்குவரத்துக்கு இடை-யூறாக நின்றிருந்தனர்.


மேலும், 'குடி'மகன்கள், தங்களது டூவீலரை பிர-தான சாலையை ஆக்கிரமித்து நிறுத்தியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள், பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சாலையில் கும்ப-லாக நின்றிருந்த, 'குடி'மகன்களை விரட்டி விட்-டனர். தொடர்ந்து, போக்குவரத்துக்கு இடையூ-றாக நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களையும் அகற்-றினர். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும்
இடையூறு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்-கப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement