பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் விற்பனைக்கு தயார்

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் அருகே மண் பானை தயாரித்து, தற்போது விற்ப-னைக்கு தயாராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.


பொங்கல் பண்டிகையை, தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வசிக்கும் வெளி மாநிலம், வெளிநாடு-களிலும் கொண்டாடப்படுகிறது. இதில், மண் பானை, கரும்பு, மஞ்சள்
ஆகியவை முக்கிய இடம் பெறும். பொங்கல் பண்டிகை நெருங்குவதால், நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், போடிநாயக்கன்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், வளையப்பட்டி உள்ளிட்ட பகு-திகளில், பொங்கல் பானை தயாரிக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்-பட்டுள்ளது. தற்போது, எருமப்பட்டி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி, வடக்கு தெருவில் வசிக்கும் சிவசாமி குடும்பத்தினர், பானை தயா-ரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து, சிவசாமி, 70, கூறியதாவது:
எங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் பானைக-ளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. பானை தயாரிக்க நபர் ஒருவருக்கு, 30 நிமிடம் ஆகும். அதை தொடர்ந்து உலர்த்தி பின், சூளை-யிட்டு முழுமை பெற ஒரு நாள் ஆகும். நாள் ஒன்றுக்கு, 15 முதல், 25 பானைகள் தயாரிக்-கின்றோம். பானைகள் விலை தற்போது, 1 படி அளவு கொண்ட பானை, 125 ரூபாய் முதல், 150 ரூபாய் வரைக்கும், 2 படி அளவு பானை, 200 ரூபாய் முதல், 250 ரூபாய் வரைக்கும், 3 படி அளவு பானை, 300 ரூபாய் முதல், 350 ரூபாய் வரைக்கும், 4 படி அளவு பானை, 450 ரூபாய், மூடி, 40 ரூபாய்,
குழம்பு சட்டி, 60 ரூபாய், பெரிய சைஸ் அடுப்பு, 250 ரூபய்,


இரட்டை அடுப்பு, 350 ரூபாய் என விற்பனை செய்கின்றோம். தற்போது, விவ-சாய தோட்டங்களில் மாடுகள் குறைந்துள்ளதால் பானை விற்பனை குறைந்து வருகிறது. இருப்-பினும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement