ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு
மஸ்கட்: ஓமனில் டிரக்கிங் சென்ற பிரபல பின்னணி பாடகி சித்ராவின் சகோதரி ஷாரதா ஐயர் விபத்தில் பலியானார்.
கேரளாவின் தாழவா பகுதியைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ஆர் ஐயரின் மகளும், பின்னணி பாடகி சித்ரா ஐயரின் சகோதரி, ஷாரதா ஐயர்,52. ஓமன் ஏர் நிறுவனத்தின் முன்னாள் மேனேஜரான இவர், கடந்த ஜனவரி 2ம் தேதி தனது குழுவுடன், ஜெபெல் ஷாம்ஸ் பகுதியில் டிரக்கிங் சென்றார். அப்போது, ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஷாரதா ஐயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஓமனில் இருந்து ஷாரதா ஐயரின் உடல், சொந்த ஊரான தாழவாவுக்கு கொண்டு வரப்பட்டு, ஜனவரி 7ம் தேதி இறுதிச்சடங்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தான் தந்தை ஆர்டி ஐயரின் மறைவுக்காக கேரளா வந்த ஷாரதா ஐயர், டிசம்பர் 24ம் தேதி தான் மீண்டும் ஓமன் திரும்பியுள்ளார். தனது சகோதரியின் மறைவுக்கு பாடகி சித்ரா ஐயர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!