பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தை: தூக்கில் போட திருநெல்வேலி கோர்ட் உத்தரவு
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே 15 வயதான பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். அவரது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயதான மகளை, 2024ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத போது,பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ பரிசோதனை நடந்தது.அதில், 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கருவில் உருவான டிஎன்ஏ மற்றும் குற்றவாளியின் டிஎன்ஏ ஒத்துப்போனது நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையானது திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இன்று அளித்த தீர்ப்பில், “குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும், அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ளனர். சொந்த மகளையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு இந்த கோர்ட் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
2வது தண்டனை
கடந்த 11 நாட்களுக்கு முன்பே இதே நீதிமன்றத்தில், மகளை கர்ப்பமாக்கிய மற்றொரு தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, மற்றொரு வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (40)
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06 ஜன,2026 - 06:16 Report Abuse
அக்காலங்களில் 'வீட்டு விலக்கு' முறை இருந்ததால் ஒரு சில நாள்கள் தள்ளினாலும் பெற்றவள் காரணம் என்ன என்று பார்த்து, கைவைத்தியமோ, மருத்துவ உதவி மூலமோ தீர்வு காணப்பார்ப்பார். இன்றோ தாயும் பெண்ணும் முகம் பார்த்துப் பேசியே கூட நாள்கள் பல ஆகும் நிலை உள்ளது. ஆனாலும், ஒரு தாய் மக்களின் கர்ப்பத்தைக்கூடவா கவனித்திருக்க மாட்டாள்? கணவன் நடத்தையின் மாறுதல் கூட கன்னுக்குத் தெரியாத அளவுக்கு முட்டாளாகவா அவள் இருந்திருப்பாள்? நம்பும்படியாக இல்லை. இவனுக்கு எட்டு தூக்குத் தண்டனை கூடப் போதாது 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
05 ஜன,2026 - 21:50 Report Abuse
பெயர் சொல்லவில்லை என்றால் மர்ம நபர் என்று நாமே அறிவித்துக்கொள்ளவேண்டியதுதான் 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
05 ஜன,2026 - 21:31 Report Abuse
சரியான தண்டனை. 0
0
Reply
Nandakumar Naidu. - ,
05 ஜன,2026 - 21:07 Report Abuse
அந்த கொடூர தந்தை பெயர் என்ன 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
05 ஜன,2026 - 20:12 Report Abuse
ஈவேரா காட்டிய வழி ......... 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
05 ஜன,2026 - 18:03 Report Abuse
கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவனெல்லாம் தமிழ் நாட்டில் சமூக நீதி விடியல் மந்திரிகள் ...இதுக்கும் திருமணம் தாண்டிய உறவு என்று விடியல் திராவிடனுங்க பெயர் வைப்பானுங்க.... 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
05 ஜன,2026 - 18:01 Report Abuse
கடந்த 11 நாட்களுக்கு முன்பே இதே நீதிமன்றத்தில், மகளை கர்ப்பமாக்கிய மற்றொரு தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, மற்றொரு வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை .....இது தொடர்கதை போல உள்ளது ...கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவனெல்லாம் தமிழ் நாட்டில் சமூக நீதி விடியல் மந்திரிகள் .....அது போன்ற மந்திரிகள் உள்ள நாட்டில் இப்படித்தான் நடக்கும் .....சீரழிந்த தமிழன் கலாச்சாரம் ... 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
05 ஜன,2026 - 17:38 Report Abuse
தூக்கிலிட்ட பிறகு போடுங்க. இவனுக்கு வாதாடின வக்கில் இருந்தால் போடுங்க 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
05 ஜன,2026 - 17:30 Report Abuse
இது போல சிறுமிகளுடன் உறவு வைத்து குற்றம் புரிந்த கைதிகளுக்கு அமெரிக்காவில் மற்ற கைதிகள் அடித்ததெ கொல்வார்கள் அது போல் நம்ம சிறையிலும் இந்த ஆளுக்கு நடக்கணும். 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
05 ஜன,2026 - 17:28 Report Abuse
இப்போ சொல்லுங்க பாப்போம். சுதந்திர இந்தியாவின் முதல் போக்ஸோ குற்றவாளி யார் என்று ?? அவரை தான் ஈவெரானு சொல்றாங்கன்ன, சொல்பவரின் தரம் எப்படி என்று நீங்களே யூகியுங்கள். இனிமே, யாராவது அந்த ஆளுக்கு வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வருவீங்க ? பொதுமேடையில தலையை காட்டுவீங்க ? உட்கார்ந்து ரசிச்சு கைதட்டுவீங்க ?? உங்க வீட்டு பெண்களிடம் அந்த ஆளைப்பற்றி பேசுவீங்க ?? 0
0
Reply
மேலும் 30 கருத்துக்கள்...
மேலும்
-
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி
-
நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்
-
மக்கள் கூடும் இடங்களில் மதுக்கடைகளை மூடணும்: பா.ம.க., ராமதாஸ் கோரிக்கை
-
இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இல்லை
-
பொங்கல் பரிசு ரூ.3,000 'டாஸ்மாக்'கிற்கு திரும்பும்
Advertisement
Advertisement