கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் இறங்கி போராட்டம்; கைது செய்த போலீசார்

1

சென்னை: சென்னை மாநகர தூய்மைப் பணிகளில் தனியார் மயத்தை கண்டித்து கூவம் ஆற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.


சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணி நிரந்தரம், மாநகராட்சியில் மீண்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று எழும்பூர் அருகே கூவம் ஆற்றில் இறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூவம் ஆற்றில் இறங்கி பணியை நிரந்தரமாக்கி தரவேண்டும் என கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Advertisement