வெனிசுலா அதிபர் கைது: சீன அதிபர் கண்டனம்
பீஜிங் : வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளதற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரசை, அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது.போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடத்தலுக்கு ஆதரவளித்தல், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மதுரோ மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், லத்தீன் அமெரிக்க விவகாரங்களுக்கான நம் அண்டை நாடு சீனாவின் சிறப்பு பிரதிநிதி கியூ சியாவோகி, அதிபர் மதுரோவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரோ மற்றும் அவரது மனைவி கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தையும், வெனிசுலாவின் இறையாண்மையையும் கடுமையாக மீறும் செயல்.சர்வதேச சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும் கட்டுப்பட்டு, பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரோ கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் எதிர்ப்பு தெரிவித்து கூறியதாக சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இன்றைய உலகம் ஒரு நூற்றாண்டில் கண்டிராத மாற்றங்களையும், கொந்தளிப்புகளையும் சந்தித்து வருகிறது. ஒரு தலைபட்சமான மற்றும் மிரட்டல் நடவடிக்கைகள் சர்வதேச ஒழுங்கை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
மற்ற நாடுகளின் மக்கள் தேர்வு செய்த வளர்ச்சிப்பாதையை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும். சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சபையின் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும். குறிப்பாக பெரிய சக்திகள் அவ்வாறு செய்வதில் முன்னிலை வகிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தைவான் மீது கண்வைக்கமால் இருந்திருக்கலாம் இப்போ வெனிசுலாவின் மக்களுக்கு சிரமம்
சீனா ஸ்வாஹா செய்ய முயற்சித்ததை டிரம்ப் தடுத்தார். வெனிஸ்வேலாவின் கேவலமான ஆட்சியாளர்கள் நாட்டை நாசப்படுத்தினார்கள் என்பது கண்கூடு.
சத்தமே இல்லை
நீங்க யோக்கியமா தைவான் ன... வேணும் னு சொல்லலயாமேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!