நான் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர்; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வேன்: மம்தா அறிவிப்பு
கோல்கட்டா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்ஐஆர் தொடர்பாக நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன். நான் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் தான் என மேற்குவங்க முதல்வர் மம்தா தெரிவித்தார்.
தெற்கு 24 பர்கானாஸில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பேசியதாவது: வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதற்கும், பலர் இறந்ததற்கும் எதிராக நாளை நாங்கள் நீதிமன்றத்தை நாடுகிறோம். அனுமதிக்கப்பட்டால், நான் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு சாதாரண பிரஜையாக வாதாடுவேன். நானும் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் தான். இந்த விவகாரம் தொடர்பாக அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும்.
யாராவது தங்கள் வயதான பெற்றோரை தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வரிசையில் நிற்க வைத்தால் பாஜக தலைவர்கள் எப்படி உணருவார்கள்? எஸ்ஐஆர் பணி தொடங்கியதில் இருந்து பலர் பயத்தால் இறந்துவிட்டனர், மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் எந்தவொரு வக்ப் சொத்துக்களையும் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டேன். அநீதிக்கு காரணமானவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். பாஜ எந்த மதத்தையும் நம்பவில்லை. பொய்களைப் பரப்புவதில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது. இவ்வாறு முதல்வர் மம்தா பேசினார்.
எஸ் ஐ ஆர் படிக்காத மக்களை துன்புருத்தும் செயல்.
நாற வாய் கொஞ்சம் வாய மூடனும்
வழக்கமான உதார்... ஆனால் இது குறித்த வழக்கு உ நீ மத்தில் உள்ளதே? எதற்காக இன்னும் ஒரு வழக்கு?
பேரைக்கேட்டாலே சும்மா அதிருதல்ல
திராவிட உத்கல பங்கா வில் உத்கல என்னும் ஒரிஸ்ஸா வை கைபற்றி யாகி விட்டது! இனி திராவிட பங்கா தான்! பிறகு நிம்மதியாக நீங்கள் இருவரும் கேரளத்துடன் சேர்ந்து வழக்கு பரையலாம்!
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்ஐஆர் பேனாவின் பணி. ஒரு சிறு காயம் ஏற்படாது. 24 மணி எப்போதும் உயிருக்கு ஆபத்து நேரும் போலீஸ், ராணுவ பணி தான் கடினமானது . பயிற்சி பெற்ற வழக்கறிஞர் நாடு முழுவதும் லட்ச கணக்கில் உள்ளனர். சட்டம் பொது. தேர்தல் ஆணையம் தன் பணியை நிறுத்தாது. தேர்தலுக்கு பின்னும் தமிழக, மேற்கு வங்க மாநிலத்தில் தணிக்கை அவசியம். கள்ள குடியேறிகள் ஓட்டு போட்டு இருந்தால் தேர்தல் முடிவு நிறுத்த வேண்டும். கிழக்கு , மேற்கு பாகிஸ்தான் தான் வக்பு சொத்து. இந்தியாவில் இந்து, கிறித்துவ இசுலாமிய சொத்து என்று இல்லை.? கிரய பதிவு சொத்து எப்போதும் செல்லும். அரசியல் சட்டம் நில உரிமையை absolute right , என்று தனி நபருக்கு கொடுக்கவில்லை.
மம்தா பானர்ஜி எஸ்ஐஆருக்கு ஆதரவாக இருந்தால், பல கோடி முஸ்லிம் ஓட்டுக்கள் பறிபோகும்.
அவர், எஸ்ஐஆரை எதிர்த்தால்,பல கோடி ஹிந்துக்களின் ஓட்டுக்கள் பறிபோகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ் நடக்கின்ற எஸ்ஐஆர் பணியை யாரும் எதிர்த்து தடுத்துவிட முடியாது.
தெற்கு 24 பர்கானாஸ் என்பது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி.இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை வாங்கி தன்னுடைய கோணிப்பையில் நிரப்பிக் கொள்வதற்காக மம்தா பானர்ஜி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவரே வாதிடுவதாக உதார் விட்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் மம்தா பானர்ஜி வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தால் ஒரளவு சீட்களை வெல்வார்.வாயைத் திறந்தால், அது பாஜகவுக்கு சாதகமாக்கி விடும்.
இந்த அம்மா, பாரதம் முழுவதும் வக்ஃப் சொத்து என்று கோரிக்கை எழுப்பினால், அதை முழுமையாக ஆதரிக்கும் போல. பாரதத்தின் காச நோயும் புற்றுநோயும் இவளே...
அநேகமாக இந்த அம்மா படித்து வழக்கறிஞராக ஆகி இருக்க வாய்ப்பில்லை. பயமுறுத்தி தேர்வு எழுதும் எழுதாமல், முன்னாபாய் MBBS மருத்துவர் மாதிரி ரவுடிசம் செய்து வழக்கறிஞர் ஆகி இருப்பார்.
இந்தக் கதறல் எப்படி அடுத்தடுத்து இவருடைய டி எம் சி ஜெயித்து ஆட்சி அமைக்கிறது என்பதைக் காட்டுகிறது ....