அதிகரியுங்கள் மக்காச் சோளம் சாகுபடிக்கு மானியம் குறியீட்டை மானாவாரி, இறவை சாகுபடி செய்ய வாய்ப்பு
கம்பம், ஜன. 18
தேனி மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடி பரப்பளவை அதிகரிக்க விவசாயிகளுக்கு வழங்கும் மானிய குறியீட்டை அதிகரிக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் மக்காச் சோள சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஒரு எக்டேருக்கு ரூ.2500 மதிப்புள்ள 10 கிலோ மக்காசோள விதை, ரூ.300 மதிப்புள்ள நுண்ணுட்ட உரங்கள், ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வேளாண் இயற்கை இடு பொருள்கள், ரூ.500 மதிப்புள்ள ஒரு லிட்டர் நானோ திரவ உரம், இதர செலவினங்களுக்கு ரூ.500 என மொத்தம் ரூ.6550 வழங்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களுக்கும் குறைந்தளவு விவசாயிகளுக்கே இந்த மானியம் வழங்கப்படுகிறது. ஒரு வட்டாரத்திற்கு தலா 50 எக்டேருக்கு மட்டும் மானியம் அனுமதிக்கப்படுகிறது. கம்பம் வட்டாரத்திற்கு மிக குறைந்த அளவான 5 எக்டேருக்கு மட்டுமே இந்தாண்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மக்காச் சோளம் விதைப்பு செய்த 160 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 10 முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது குவிண்டால் ரூ.2500 வரை விலை கிடைகிறது. 90 நாட்களிலேயே தட்டையை அறுத்து கேரளாவிற்கு யானைகள் மற்றும் கால்நடைகள் தீவனத்திற்கு நல்ல விலைக்கு வாங்கி செல்கின்றனர். எனவே மக்காச் சோளம் சாகுபடி செய்ய விவசாயிகளை வேளாண் துறை ஊக்குவிக்க வேண்டும். ஊக்குவித்தால் மானாவாரி மற்றும் இறவை பாசனத்தில் மக்காசோளம் சாகுபடி அதிகரிக்கும். தோட்ட விவசாயிகளையும் ஊக்குவிக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து வேளாண் துறையினர் கூறுகையில் , மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலுக்கு பயந்து விவசாயிகள் இதனை சாகுபடி செய்ய தயங்குகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் காய்கறி, வாழை திராட்சை விரும்பி சாகுபடி செய்கின்றனர். மானாவாரியில் மொச்சை , துவரை, தட்டை, சோளம் பயிடுகின்றனர். இருந்தாலும் மக்காச் சோளம் சாகுபடி செய்ய ஊக்குவித்து வருகிறோம், என்றனர். இணை இயக்குநர் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வழங்கும் மானிய குறியீட்டை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும்
-
கொலம்பியாவில் ஆயுத குழுக்கள் மோதி கொண்டதில் 27 பேர் பலி
-
அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' பெயர் நீக்கத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
-
குன்றத்து மலையில் சந்தனக்கூடு விழா: தர்காவின் மேல் முறையீடு நிராகரிப்பு
-
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து மூவர் பலி
-
பாஜவின் புதிய தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வானார் நிதின் நபின்
-
தென் ஆப்ரிக்காவில் டிரக் மீது பள்ளி வாகனம் மோதல்: 13 மாணவர்கள் பலி