பார் உரிமையாளர் உதவியுடன் மதுபாட்டில்கள் கடத்தல்

தேவதானப்பட்டி: ஜன. 18--: பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் - கோவில்புரம் ரோட்டில் ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்துவதாக ஜெயமங்கலம் போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் ஆட்டோவை சோதனையிட்டதில் சாக்கில் டாஸ்மாக் மதுபாட்டில் 200 கடத்திச் செல்வது தெரிய வந்தது.

போலீசாரை பார்த்தவுடன் ஆட்டோவிலிருந்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் செல்வா, கடத்திய அன்பு, லாரன்ஸ் மற்றும் மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதற்கு உதவிய பார் உரிமையாளர் பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 200 மது பாட்டில்கள் ஆட்டோ கைப்பற்றப்பட்டது.

Advertisement