எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தேனி: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அவரது சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தேனி நேரு சிலை அருகில் அ.தி.மு.க., சார்பில் உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் சுந்தரபாண்டியன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முத்துக்கிருஷ்ணன், நிர்வாகிகள் ஈஸ்வரன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அல்லிநகரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் ரங்கநாதன் தலைமை வகித்தார். துணை செயலாளர் மயில்வேல், நிர்வாகிகள் ஜெயக்குமார், குருசாமி, ராஜகுருபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர் செயலாளர் அருண்மதிகணேசன் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: அ.தி.மு.க., சார்பில் வடகரை பஸ்ஸ்டாண்டில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., படத்திற்கு நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மாலை அணிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பெரியவீரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் முகமது சலீம், நகர துணை செயலாளர் வெங்கடேசன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பெரியகுளத்தில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் சார்பில் வடகரை அரண்மனை தெருவில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு நகர அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில், நகர செயலாளர் அப்துல்சமது மாலை அணிவித்தார். கவுன்சிலர் சண்முகசுந்தரம், பொதுக்குழு நிர்வாகிகள் கண்ணன், முருகானந்தம், அன்பு, ரெங்கராஜ், ராஜவேல், சேதுராமன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூடலுார்:- தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளியில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கூடலுார் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளியில் நகரச் செயலாளர் அருண்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன் முன்னிலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து கூடலுார் கன்னிகாளிபுரம் பகுதியில் பொங்கல் வழங்கினர்.
மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கரிகாலன், துணைச் செயலாளர் சோலைராஜ், நகர துணைச் செயலாளர் பாலைராஜா, பொருளாளர் லட்சம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மேலும்
-
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு
-
பொங்கல் விடுமுறை நிறைவு பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்
-
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
சேந்தமங்கலம் கிழக்கில் சமுதாயக்கூடம் திறப்பு
-
தி.மு.க., சார்பில் மாட்டுவண்டி பந்தயம் ரூ.2.32 லட்சம் பரிசு தொகை வழங்கல்
-
கரூர் வட்டாரத்தில் கடும் பனி பொதுமக்கள் குளிரால் தவிப்பு