கோஷ்டி தகராறில் ஏழு பேர் மீது வழக்கு

போடி: போடி அருகே பொட்டல்களம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. மனைவிகள் மேகலா, முத்துமாரி உறவினர் கணேசன் ஆகிய நான்கு பேரும் அங்கு உள்ள ஹவுசிங் போர்டு முன் சிக்கன் கடை வைத்துள்ளனர்.

கடையில் மது அருந்த அனுமதிக்க கூடாது என அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் 25, கூறி உள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள் ளது.

இது சம்பந்தமாக ஆனந்த் அண்ணன் அன்புச்செல்வன் 32, தாயார் லிங்கம்மாள் 52 கேட்க சென்றுள்ளனர்.

ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி, மேகலா உட்பட 4 பேரும் சேர்ந்து அன்புச்செல்வன், லிங்கம்மாளை திட்டி, கத்தியால் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

காயம் அடைந்த மூவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொட்டல்ளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. மனைவிகள் மேகலா, முத்துமாரி உட்பட 4 பேர் சிக்கன் கடையில் இருந்த மேகலாவிடம் ஆசைக்கு இணங்க பணம் தருவதாக ஆனந்த் கூறினார்.

இதனை முத்துப் பாண்டி, முத்துமாரி கண்டித்துள்ளனர்.

இதனால் ஆனந்த் அண்ணன் அன்பு செல்வன், தாயார் லிங்கம்மாள் மூவரும் சேர்ந்து மேகலாவை தாக்கினர் என ஆனந்த் புகாரில் முத்துப்பாண்டி, மேகலா உட்பட 4 பேர் மீதும், மேகலா புகாரில் ஆனந்த், அன்புசெல்வன் உட்பட மூவர் மீதும் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement