ஐபோன் ஏற்றுமதியில் புது உச்சம்: மேக் இன் இந்தியா திட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் சாதனை
புதுடில்லி: ஐ போன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனமானது, இந்தியாவை தனது தயாரிப்புகளுக்கான உற்பத்தி மையமாக மாறியுள்ளது. அந்த நிறுவனமானது, 2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 50 பில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் 4.51 லட்சம் கோடி ரூபாய்) மதிப்புள்ள ஐ போன்களை ஏற்றுமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2025ம் ஆண்டு 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இது பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முக்கிய மைல் கல்லாகவும், நமது பொருளாதாரம் உற்பத்தி பொருளாதாரமாக மாற்றுவதற்கானதிலும் முக்கியமானதாக உள்ளது.
மின்னணு பொருட்களின் உற்பத்தி கடந்த 11 ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கான தலைமையின் கீழ் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது.இந்த வளர்ச்சியானது, இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் 3 பொருட்களில் ஒன்றாக மின்னணு பொருட்கள் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு நான்கு செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் துவங்கப்பட உள்ளன. மின்னணு உற்பத்தித் துறையில் தற்போது 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன.பல தொழிற்சாலைகள் ஒரே இடத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்ன. சில ஆலைகளில் ஒரே இடத்தில் 40 யிரம் ஊழியர்களை பயன்படுத்துகின்றன.
இது வெறும் துவக்கம் தான். வடிவமைப்பு, உற்பத்தி, ஓஎஸ், சாதனங்கள் மற்றும் கருவிகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த மின்னணு அமைப்புகளில் பாரதம் முக்கிய பங்காற்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில்(PLI) ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது. மின்னணு சார்ந்த உற்பத்தியில் இந்த நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஐந்து ஐபோன் தொழிற்சாலைகள் உள்ளன. மூன்று நிறுவனங்கள் டாடா குழுமத்தாலும், இரண்டு பாக்ஸ்கான் குழுமத்தாலும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்திக்கு மிக்க நன்றி. எந்த மாநிலத்தில் இந்த தொழிற்ச்சாலைகள் உள்ளது என்று குறிப்பிட்டால் மிகவும் தெளிவாக irukkum
சென்னை,ஓசூர்,பெங்களூரு,
மகாராஷ்டிரா,ஹரியானா. இது போக ஆப்பிள் ஐ போனுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் மாநிலங்கள் பல உள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், அதற்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 100 சதவிகிதம் அல்லது 200 சதவிகிதம் வரி விதித்து கடுப்பு ஏற்றுவாரா...?
ஐபோன் உற்பத்தியில் உச்சம் என்றால் இங்கே மாடல் அரசு டாஸ்மாக்கில் உச்சம் தொட்டு உலக சாதனை படைத்திருக்கிறது.
Apple to Manufacture the entire iPhone 17 series for the US market in India.
India exported $4.2 Billion worth of iPhones in 3 months, 97% to the US. Despite Trumps slogans, Apple chose factories in India, not America. India isnt a backup anymore. Its the boss!
local content in Indian made iphone is 20 percent only.remaining 80 percent imported meaning in an export bill of 10000 dollar only 2000 dollar is Indian content.
sankar has invented iphone..so he will get 80% ....funny guy....மேலும்
-
கல்லுாரி படிப்பை கைவிட்ட மகன் தாயுடன் சேர்ந்து ரூ.240 கோடி மோசடி
-
ஓட்டளிப்பதே சிறந்தது!
-
தகவல் சுரங்கம்
-
அனைத்து தேர்தல்களிலும் இனி தனித்தே போட்டி: மாயாவதி அறிவிப்பு
-
குரோக் ஏஐ.,யில் மாற்றம்: புகைப்படங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தது எக்ஸ்!
-
அமெரிக்கா வரி விதிப்பால் ஈரானுக்கு இந்திய நிறுவனம் ஏற்றுமதி செய்ய முடியாது: சசி தரூர் கவலை