ஓட்டளிப்பதே சிறந்தது!

1

தேர்தல்கள் ஜனநாயகத்தின் கட்டாயம்; வாக்காளர்கள், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த 'நோட்டா' என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது, விரும்பத்தகாத நபரை நாம் ஊக்குவிக்க வழிவகுக்கும். எனவே, யாருக்கும் ஓட்டளிக்காமல் இருப்பதை விட, ஒருவருக்கு ஓட்டளிப்பதே சிறந்தது.

மோகன் பாகவத் தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,

பழங்கால சிலைகள் அழிப்பு!



உ.பி., வாரணாசியில் உள்ள மணி கர்ணிகா படித்துறை, அரிய வரலாற்று பாரம்பரிய பகுதியாக திகழ்கிறது. மறுசீரமைப்பு என்ற போர்வையில் அப்பகுதியை இடிப்பதுடன், படித்துறையில் இருந்த பழங்கால சிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் தன் பெயரை பொறிக்கவே பிரதமர் மோடி விரும்புகிறார் .

மல்லிகார்ஜுன கார்கே தலைவர், காங்கிரஸ்

ஏற்றுமதி செய்ய முடியாது!



ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீத வரி விதிப்பது கவலை அளிக்கிறது. 75 சதவீத வரியுடன், எந்த இந்திய நிறுவனமும் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது சாத்தியமற்றது. மருந்துப் பொருட்கள் தவிர, மற்றவை லாபகரமானதாக இருக்காது.

சசி தரூர் லோக்சபா எம்.பி., காங்.,

Advertisement