அனைத்து தேர்தல்களிலும் இனி தனித்தே போட்டி: மாயாவதி அறிவிப்பு
லக்னோ: 2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உ.பி., முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு இன்று (ஜனவரி 15) 70 வது பிறந்த நாள்.
இந்நிலையில் லக்னோவில் மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் 2027 உ.பி. சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடு முழுவதும் நடைபெறும் மற்ற தேர்தல்களிலும் பிஎஸ்பி எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கும்.
கடந்த காலங்களில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தபோது, பிஎஸ்பி-யின் ஓட்டுக்கள், கூட்டணிக் கட்சிகளுக்கு முழுமையாகக் கிடைத்தன. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்கள் (குறிப்பாக உயர் சாதியினரின் ஓட்டுக்கள் ) பிஎஸ்பி-க்கு முழுமையாக மாற்றப்படவில்லை, இதனால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது.
2007-ஆம் ஆண்டைப் போலவே, 2027-லும் உத்தரப் பிரதேசத்தில் பிஎஸ்பி தனிப்பெரும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடுகள் நடக்கிறது. இருப்பினும் பிஎஸ்பி தனது முழு பலத்துடன் தேர்தல்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.
ஸ்டாலினை போன்று தலித் மக்களின் ஓட்டை பயன்படுத்தி ஜெயித்துவிட்டு முலாயம் அவர்களை ஏமாற்றுவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். மாயாவதி போன்று திருமாவும் தனியாக நிற்க வேண்டும்.
ஊருக்கு ஊர் யானை சிலை அமைத்தே கஜானாவை காலி செய்த பெருமை மாடத்தைத்தான் சேரும் இன்னுமா யானை சிலை பாக்கி இடங்களில் வைத்து பாராட்ட வேண்டும் போதுமடா சாமி யானைப்பசிக்கு சோறு போட்டுதாளுமா
ஹிஹிஹி ஓகே ஓகேகே
Madame Mayavati , you are so good in digging your own grave . Look at your party now , how pathetic it is , even in UP where you have ruled four times that too once with full majority . You have ditched your community because of short sighted mercurial policies
yaru Samy nee