குரோக் ஏஐ.,யில் மாற்றம்: புகைப்படங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தது எக்ஸ்!

1

வாஷிங்டன்: எலான் மாஸ்க்கின் எக்ஸ் தளம், தனது ஏஐ கருவியான குரோக் மூலம் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் வசதிக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

நிஜ மனிதர்களின் புகைப்படங்களைத் தொகுத்து, அவர்களை ஆபாசமான ஆடைகளுடன் காட்டுவதற்கு குரோக் கணக்குகளை அனுமதிக்காத வகையில் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை எக்ஸ் தளம் அமல்படுத்தியுள்ளது.
ஏஐ மூலம் உருவாக்கப்படும் பாலியல் படங்கள் அதிகரித்து வருவதால் எழுந்த கவலைகளே இந்த மாற்றத்திற்குக் காரணம்.இது தொடர்பான உலகளாவிய எதிர்ப்புகளைத் தொடர்ந்து எக்ஸ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தமது முயற்சிக்கு வெற்றி:



பிரிட்டன் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், இத்தகைய ஏஐ கருவிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது எக்ஸ் எடுத்துள்ள இந்த முடிவை, தமது முயற்சிக்குக் கிடைத்த "வெற்றி" என பிரிட்டன் அரசு குறிப்பிட்டுள்ளது.

Advertisement