அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் ஓஹியோ வீடு மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது

6


வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் வீட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.


அமெரிக்க துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் இருக்கிறார். இவரது ஓஹியோ வீடு மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவம் நடந்தபோது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. இந்தச் செயல் ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரான இலக்கு தாக்குதலா என்பதை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


துணை அதிபர் வீட்டின் வெளிப்புறத்தில் ஜன்னல்களை சேதப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் புறப்பட்டு சென்றதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement