வெனிசுலா மக்களின் பாதுகாப்பு முக்கியம் ; ஜெய்சங்கர்

1


புதுடில்லி: வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.


மேற்கு ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது; பல ஆண்டுகளாக வெனிசுலாவுடன் இந்தியா நல்ல உறவை கடைபிடித்து வருகிறது. வெனிசுலாவில் நடந்து வரும் நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. தற்போது, அதிகாரத்தில் அனைவரும் அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது, ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து வெனிசுலா மக்கள் மீண்டு வர வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருக்கிறது, எனக் கூறினார்.


வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடந்த ஜனவரி 3ம் தேதி அமெரிக்க படைகளினால் சிறைபிடிக்கப்பட்டு, தற்போது ப்ரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவர் மீதான வழக்கு மார்ச் 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement