திருப்பூர் குமரன் குன்று கோவிலை அகற்ற முயற்சி; எதிர்த்து போராடிய இந்து முன்னணியினர் 200 பேர் கைது

35

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்தபோது, ஹிந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். நிர்வாகிகள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


@1br@திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்றில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள், பக்தர்கள், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில், சிலர் காயம் அடைந்தனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. ஏராளமான போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



@block_Y@

சாலை மறியல்

கோவிலை இடித்து அகற்ற முயன்றதை பார்வையிட சென்ற ஹிந்து முன்னணி மாநில தலைவர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தாராபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஹிந்து முன்னணி அமைப்பினர் ஈடுபட்டனர்.block_Y
Latest Tamil News


@block_G@

நயினார் கண்டனம்

இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும். திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டி பகுதியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை திமுக அரசு இடிக்க முயற்சித்ததோடு, அதைத் தடுக்க வந்த ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மீதும், பாஜ நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.


மதச்சார்பின்மை என்னும் போர்வையில் கோவிலைக் காக்க வந்த பக்த கோடிகளைத் தாக்குவது, குன்றத்தில் தீபத்தூணில் தீபமேற்ற மறுப்பது, அறுபடைவீட்டை சுடுகாட்டுடன் ஒப்பிடுவது, திருத்தேரோட்டத்தில் வைத்து பக்தர்களை வசைபாடுவது, கோவிலுக்குச் செல்வதை அநாகரீகம் என்று இழிவுபடுத்துவது, அடிப்படை அறிவின்றி சனாதன தர்மத்தைக் கொடூர நோய்களுடன் ஒப்பிடுவது எனத் தொடர்ந்து ஹிந்து விரோதப் போக்கைக் கைவிடாது தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு தனது ஹிந்து மத வெறுப்பாலேயே மண்ணைக் கவ்வும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். block_G

Advertisement