திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடுத்ததால் மன உளைச்சல்: தவெகவில் இணைந்த திமுக முன்னாள் ஒன்றிய செயலர்
மதுரை: திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தவெகவில் இணைந்தார். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை அரசு தடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன். இவர் 30 ஆண்டுகளாக தி.மு.க.,வில் இருந்தார். கிளை, ஒன்றிய செயலாளர், 16 ஆண்டுகள் கவுன்சிலர் பதவி, மாவட்ட திட்டக் குழு துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். இந்நிலையில் இன்று அவர், த.வெ.க., தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.
இதன் பிறகு அவர் கூறியதாவது: திமுகவில் ஜனநாயகம் இல்லை. சமத்துவமும் இல்லை. நான் ஆன்மிகவாதி. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சி துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை சிறுபான்மையினரின் ஓட்டு அரசியலுக்காக திமுக மறுத்துவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களில் நானும் ஒருவர். திமுகவில் ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்தாலும் ஹிந்து என்ற உணர்வில் இருந்த நான் அச்சம்பவத்தால் மனஉளைச்சலில் இருந்தேன். தற்போது தவெகவில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்மீகவாதி ன்னா... எதுக்கு யா... தி மு க ல போய் சேந்த.... சும்மா.... அதவும் 30 ஆண்டு காலம் கட்சில பல பதவிகள் ல இருந்து சம்பாதிச்சிருக்க... இப்போ என்ன யா... கதை அலக்குற...
நீர் ரோசமுள்ள தமிழன்யா...
மெண்டல் மாதிரி பேசுறான்.. வேறு எங்கே போவான்
TVK ஒரு மாய்னாரிட்டி கட்சி . நிச்சயமாக அதன் தலைமை நேரடியாக ஆதரிக்காது. நல்ல முடிவு, சேர்ந்த இடம் சரியில்லை
காரணம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேறு எதாவது காரணம் கூறி தவெகவில் இனைந்திருக்கலாம்.
உண்மை
தவெகவின் விஜய் இதுவரை அந்த திருப்பரங்குன்ற நிகழ்வுக்கு ஹிந்துக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில், இவர் ஏன் அந்த கட்சியில் இணையவேண்டும்? Something wrong, something suspicious.
திமுக காரனுங்கள நம்ப முடியாது சாமி.....
மன உளைச்சலில் ஏன் தவெகவில் இணையவேண்டும். பாஜகவில் இணைந்திருக்கலாமே... இவருடைய காரணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தவெகவின் விஜய் கூட ஒரு ஹிந்து எதிரி. விஜய் ஒரு ஹிந்து பண்டிகையின்போதும் ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் மற்ற மதத்தினருக்கும், அவர்களுடைய பண்டிகைக்கும் மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார்.
இது என்ன மாதிரியான காமெடி.....தவெக கிறிஸ்தவ திருச்சபை கட்சி...அது எப்படி தீபம் ஏற்ற ஆதரவாக இருக்கும்? தீபத் தூண் போராட்டத்தில் இஸ்லாமிய கும்பலை ஆதரித்த கட்சி தவெக.... இந்த ஆளுக்கு திமுகவில் சீட் கிடைக்காது என்பதால் தவெக வில் துண்டு.அதற்கு இப்படி ஒரு உருட்டு...
He has jumped from boiling oil to fire instead he should have joined BJP or AIADMK.மேலும்
-
தமிழகத்தில் இன்று 12 மாவட்டம், நாளை 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
-
ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
கரூர் சம்பவம்; விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
-
பாஜ கூட்டணியால் ஜெயித்தோம் என்ற எண்ணம் அதிமுகவுக்கு வரணும்: ரங்கராஜ் பாண்டே
-
உண்மையான ஜனநாயகன் நான் தான்; சொல்லி வேதனைப்பட்ட சீமான்
-
நமது இளைஞர் சக்தி வலிமையானது: பிரதமர் மோடி பெருமிதம்