சென்னை ஏர்போர்ட்டில் ரூ.93 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்; பெண் பயணியிடம் விசாரணை

1

சென்னை: விமானத்தில் கடத்தி வந்த, 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.


இலங்கையில் இருந்து சென்னைக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.


அப்போது, சென்னையை சேர்ந்த பெண் பயணி ஒருவர், சுற்றுலா சென்று திரும்பினார். அவரது உடைமையை சோதனை செய்த போது, தங்க பசை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் எடை 125 கிராம். மதிப்பு 93 லட்சம் ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement