பில்லியர்ட்ஸ் முன்னாள் உலக சாம்பியன் திருநெல்வேலி மருத்துவமனையில் இறப்பு!
திருநெல்வேலி: பில்லியர்ட்ஸ் போட்டிகளில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற மனோஜ் கோத்தாரி உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவை சேர்ந்தவர் மனோஜ் கோத்தாரி 67. பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர். இவர் கடந்த 1990ம் ஆண்டில் நடந்த போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். பில்லியர்ட்ஸ் விளையாட்டுக்கான அகில இந்திய தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இந்திய அரசு இவருக்கு 2005ல் தயான் சந்த் விருது வழங்கியது.
இவர் கல்லீரல் பாதிப்பால், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்களது பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நன்கொடையாளர் மூலம் டிசம்பர் 26ம் தேதி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவரது மனைவி நீட்டா , மகன் சவுரவ் கோத்தாரி ஆகியோர் உடன் இருந்தனர். உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர். மருத்துவமனை சார்பில் அவரது உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது. உடல் திருநெல்வேலி வி.எம்.சத்திரம் மாநகராட்சி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
இவரது மகன் சவுரவ் கோத்தாரியும் பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் ஆவார். இவரும் பில்லியர்ட்ஸ் விளையாட்டு போட்டியில் 2025ல் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் சாந்தி. ஓம் சாந்தி.மேலும்
-
காங்கிரஸ் எம்.பி.,யிடம் கேள்வி கேட்கும் மக்களை மிரட்டுவதா? அண்ணாமலை கண்டனம்
-
மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது கொடுந்துயரம்; சீமான் சாடல்
-
அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
-
சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை; 22 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கோரிய ஆக்ஸ்போர்டு பல்கலை
-
ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனை; வந்தே பாரத் ரயிலில் 16 வயது சிறுவனுக்கு சசி தரூர் பாராட்டு
-
திருப்பூர் குமரன் குன்று கோவிலை அகற்ற முயற்சி; எதிர்த்து போராடிய இந்து முன்னணியினர் 200 பேர் கைது