அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்

17

சுல்தான்பூர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு சுல்தான்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


@1brகடந்த 2018ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு பேசியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் மீது, பாஜ தலைவர் விஜய் மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு எம்பி,எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.


நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காங்கிரஸ் எம்பி ராகுல் தரப்பு வக்கீல் காஷி பிரசாத் சுக்லா, வழக்கின் சாட்சியான ராம் சந்திரா துபேவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, விசாரணைக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் ஜனவரி 19ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


ஏற்கனவே அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த ராகுல், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement