காங்கிரஸ் எம்.பி.,யிடம் கேள்வி கேட்கும் மக்களை மிரட்டுவதா? அண்ணாமலை கண்டனம்

6


சென்னை: கரூர் எம்பி ஜோதிமணியிடம் கேள்வி கேட்க வந்த நபர் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம், தொகுதி பிரச்னை குறித்து கேள்வி எழுப்ப வந்த நபரை, காங்கிரஸ் நிர்வாகிகள் தள்ளிவிட்டு தாக்கிய வீடியோவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அண்ணாமலை பகிர்ந்தார். மேலும், அவர் கூறியதாவது;

தனது தொகுதி எம்பியிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயக முறையில் கேள்வி கேட்டால், ஏன் மிரட்டல் விடுக்கிறீர்கள்? இந்தக் கேள்வி கருர் எம்பிக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக தூக்கத்தில் இருக்கும் இண்டி கூட்டணி எம்பிக்களும் தான்.


கேள்வி கேட்கும் போது, அதற்கு முறையாக பதிலளிக்காமல், மிரட்டல், உருட்டல் விடுப்பது, தங்களின் தோல்விகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு சமம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement