சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை; 22 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கோரிய ஆக்ஸ்போர்டு பல்கலை

6


புனே: சத்ரபதி சிவாஜி குறித்து புத்தகத்தில் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகம் மன்னிப்பு கோரியுள்ளது.


அமெரிக்க வரலாற்று ஆசிரியர் எழுதிய,'சிவாஜி: இஸ்லாமிய இந்தியாவில் ஹிந்து மன்னன்' என்ற ஆங்கில மொழி புத்தகத்தை ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தால் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த ஆதாரமற்ற தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. அதனை ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகமும் ஒப்புக் கொண்டது.


இந்த நிலையில், 22 ஆண்டுக்குப் பிறகு, சத்ரபதி சிவாஜியின் 13வது தலைமுறை வாரிசும், எம்பியுமான உதயன்ராஜே போஸ்லேவிடம் ஆக்ஸ்போர்டு பல்கலையின் பதிப்பகம் மன்னிப்பு கோரியுள்ளது.


மன்னிப்பு கடிதத்தில் ; புத்தகத்தின் 31, 33, 34 மற்றும் 93வது பக்கங்களில் ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மகாராஜ் பற்றிய சில தகவல்கள் ஆதாரமற்றவை என்பதை ஒப்புக்கொள்கிறோம். இதற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சம்பவத்திற்காக, உதயன்ராஜே போஸ்லே மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement