மேல்மருவத்துார் பக்தர்கள் மீது கல் வீசிய சிறுவர்கள் கைது
பெங்களூரு: மேல்மருவத்துார் செல்ல மாலை அணிந்திருந்த பக்தர்கள் மீது, கல்வீசிய வழக்கில், மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவின் பெங்களூரு ஜே.ஜே.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வி.எஸ்.கார்டனில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் சிலர், தமிழகத்தின் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல மாலை அணிந்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வி.எஸ்.கார்டனில் உள்ள பஞ்சமுகி நாக தேவதை கோவில் பகுதியில், ஓம் சக்திக்கு மாலை அணிந்தவர்கள், ஓம் சக்தி சிலையை தோளில் சுமந்து ஊர்வலம் சென்றனர். திடீரென பக்தர்கள் கூட்டத்தை நோக்கி, யாரோ கல் வீசி தாக்கினர். இதில் மூன்று பெண் பக்தர்கள் தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மீது கல்வீசியதாக கூறி, ஓம் சக்தி பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மேற்கு பிரிவு டி.சி.பி., யதீஷ் விரைந்து சென்றார். போராட்டம் நடத்திய பக்தர்களிடம் பேச்சு நடத்தினார். அசம்பா விதங்கள் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பக்தர்கள் மீது கல் வீசிய 15, 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்களை, நேற்று முன்தினம் இரவே ஜே.ஜே.நகர் போலீசார் கைது செய்தனர்.
டி.சி.பி., யதீஷ் கூறுகையில், ''ஓம் சக்தி பக்தர்கள் மீது கல் வீசிய சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை கல் வீசச் சொல்லி துாண்டி விட்டது யார் என்று விசாரணை நடக்கிறது,'' என்றார்.
கைதானவர்களை காப்பாற்ற காங்கிரசை சேர்ந்த அமைச்சர் ஜமீர் அகமது கான் போலீஸ் ஸ்டேஷன் சென்று, சமாதான பேச்சில் ஈடுபட்டதாக கூறி, பஜ்ரங் தள் அமைப்பினர், போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டம் நடத்தினர்.
மேலும்
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்