ராகுலை துாக்கிலிடுங்க!
தெலுங்கானா மக்களை ஏமாற்றியதற்காக, முதல்வர் ரேவந்த் ரெட்டியையும், காங்., - எம்.பி., ராகுலையும் பலமுறை துாக்கிலிட வேண்டும். மாநிலத்தின் நலன்களுக்கு எதிராக ரேவந்த் ரெட்டி செயல்படுகிறார். சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை காங்., அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இது நம்பிக்கை துரோகம்.
- கே.டி.ராமா ராவ் செயல் தலைவர், பாரத் ராஷ்டிர சமிதி
தீர்க்கமான போர்!
நம் ஆயுதப் படைகளின் திறன் குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஓவைசி சந்தேகம் எழுப்பி உள்ளார். பயங்கரவாதத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் பாக்., மீதான தாக்குதலுக்கு சமம். நம் நாட்டில் நக்சலிசம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு தீர்க்கமான போர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் வெற்றி உறுதியாகி விட்டது.
- கவுரவ் வல்லப் செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
கேலிக்கூத்து!
தெலுங்கானாவில், முந்தைய பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது உண்மை. இதை கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பாரத் ராஷ்டிர சமிதியில் நடப்பவை எல்லாம் கேலிக்கூத்தாக இருக்கின்றன. அந்த கட்சியில் கட்டமைப்பே இல்லை. கட்சி அலுவலகத்தை இழுத்து மூடி விடலாம்.
- கவிதா, பாரத் ராஷ்டிர சமிதியில் இருந்து சஸ்பெண்ட் ஆனவர்
மேலும்
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்