ரூ.9,000 கோடி கடன் பத்திரம் நிதி திரட்டிய 'எக்ஸிம்' பேங்க்
மத்திய அரசுக்கு சொந்தமான எக்ஸிம் எனப்படும் 'எக்ஸ்போர்ட் - இம்போர்ட்' வங்கி, அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டு, வெளிநாட்டு சந்தைகளில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டியுள்ளது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் இது கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாயாகும்.
இந்தியாவில் நடப்பாண்டு வெளியிடப்படும் முதல் கடன் பத்திரம் இதுவாகும். இந்த 9,000 கோடி ரூபாய் நிதியானது இரண்டு பிரிவுகளாக, இரு வேறு வட்டி விகிதங்களில் திரட்டப்பட்டுள்ளது.


இந்த பத்திரங்கள் சிங்கப்பூர், லண்டன் மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும். திரட்டப்பட்ட நிதியானது இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு கடன் வழங்குவதற்கும், மூலதன பொருட்கள் இறக்குமதிக்கும் பயன்படுத்தப்படும் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிட்ச் நிறுவனம் இதற்கு 'பிபிபி மைனஸ்' தரச்சான்று வழங்கி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement