செனாப் நதி குறுக்கே அணை கட்டும் பணி வேகமெடுத்தது! நீராதாரம் கேள்விக்குறி ஆனதால் பாக்., அதிர்ச்சி.. சிந்து நதிநீர் ஒப்பந்த மீறல் என கதறல்
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் குறுக்கே, 3,000 மெகாவாட் நீர் மின் திட்டத்தை அமைப்பதற்காக, நான்கு அணைகள் கட்டும் பணிகளை, 2028க்குள் முடிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானில் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் நீராதாரம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவம், தன் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு மூலம் பயங்கரவாதிகளை ஏவிவிட்டு, நம் நாட்டுக்கு எதிராக கோழைத்தனமான தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகிறது.
அதன் சமீபத்திய உதாரணம் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதல். இதில், 26 பேர் கொல்லப் பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் ராணுவம் துணிச்சலான நேரடி தாக்குதலில் ஈடுபட்டது.
4 அணைகள்
அதுமட்டுமின்றி, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த ஒப்பந்தம், 1960ம் ஆண்டு கையெழுத்தானது. இதன்படி பீஸ், ரவி, சட்லஜ் நதிகள் இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகள் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டன.
பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நதிகளின் நீர் ஓட்டத்தை குறுக்கீடு செய்யாமல் குடிநீர் வினியோகம், மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு மட்டும் இந்தியா பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் அனுமதி அளித்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர், மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்த போதும், இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்தது. பாகிஸ்தானின் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்ற ஒரே மனிதாபிமான காரணத்துக்காக, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கை வைக்காமல் தவிர்த்து வந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக, மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, அந்த மூன்று நதிகளின் நீரை தேக்கி வைத்து பயன்படுத்தும் திட்டங்களை நம் அரசு துவங்கியது.
பாகிஸ்தானின் உணவு கூடை என்று அழைக்கப்படும் பஞ்சாப் மாகாணம், 1.60 கோடி ஹெக்டர் விளைநிலங்களுக்கு செனாப் உள்ளிட்ட நதிகளையே நம்பி உள்ளது. மேலும், குடிநீருக்கும் செனாப் நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் நீர் மின் திட்டத்துக்காக, செனாப் நதியின் குறுக்கே நான்கு அணைகளை மத்திய அரசு கட்ட துவங்கியது.
பாஹல் துல் அணை -- 1,000 மெகாவாட்; கிரு அணை - 624 மெகாவாட்; குவார் அணை - 540 மெகாவாட்; ரத்லே அணை - 850 மெகாவாட் ஆகிய நீர் மின் திட்ட பணிகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் பாஹல் துல், கிரு, குவார் ஆகிய அணைகள் ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளன.
மத்திய மின் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் இந்த திட்ட பணிகளை, கடந்த 4ல் நேரடியாக ஆய்வு செய்தார். ரத்லே அணையின் நீர் மின்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் சில பணிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அதன் பின், தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவன அதிகாரிகள் மற்றும் செனாப் நீர் மின் திட்ட அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பாஹல் துல் மற்றும் கிரு நீர் மின் திட்டங்களை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னரும், குவார் திட்டத்தை 2028-க்குள்ளும், ரத்லே அணை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.
கண்டனம்
திட்டமிட்டப்படி இந்த பணிகள் நிறைவடைந்தால், 2028க்கு பின் ஜம்மு - காஷ்மீரின் மின் தேவை பூர்த்தியாவதுடன், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரின் அளவு மற்றும் நேரத்தை இந்தியா தீர்மானிக்கும். செனாப் நதியில் அணைகள் கட்டுமானத்தை மத்திய அரசு வேகப்படுத்தியிருப்பதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு எம்.பி., ஷெர்ரி ரஹ்மான் நேற்று கூறுகையில், ''இது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல். ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக நீக்கிவிட்டு, அணை கட்டும் பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர். நீரை ஆயுதமாக்குவதை ஏற்க முடியாது. இது பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும்,” என்றார்.
அமெரிக்கா சீனாவிடம் போய் அழு, உனக்கு நீயே குண்டுவைத்து அழிந்துக்கொள்.
ஆபரேஷன் சிந்தூரை 3 நாளில் நிறுத்தியது போல, இதை நிறுத்திவிடக்கூடாது.. பள்ளிக்குழந்தைகள் அப்பா அம்மாவை கூட்டிக்கொண்டு வருவது போல, அவன் அமெரிக்காவை கூட்டிக்கொண்டு வருவான் தடுத்து நிறுத்த.. என்ன ஆனாலும் சரி.. பயங்கரவாத பாகிஸ்தானை ஒழிக்காமல் விடக்கூடாது..
அவனிடம் அளவு கடந்த வளம் உள்ளது. பின்பு அவன் எதுக்கு கவலைப்பட போறான். அப்படியே ஆனாலும் அமெரிக்கா காலில் சென்று விழுவான். பஞ்சாயத்து பேச சொல்லுவான். அல்லது சீனாவிடம் சொல்லி அங்கேயே ஒரு ரெண்டாயிரம் பேருக்கு குண்டு வைக்க ட்ரைனிங் தர சொல்லுவான்.
உங்கள் அழிவு மானிட வாழ்க்கைக்கு நல்லது.
மேதா பட்கர் போன்ற வெளிநாட்டு நிதியுதவி பெறும் ஐந்து நட்சத்திர சமூக ஆர்வலர்கள், குஜராத்தின் கட்ச் பகுதிக்கு நர்மதா நீர் கிடைப்பதைத் தடுக்கத் தங்களால் இயன்றவரை பலகட்ட பெரிய உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்து முயற்சி செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மோடி, அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும் வரை இந்த நிலை நீடித்தது. இன்று அதே அணை 3 மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது மேலும் கோடிக் கணக்கான இந்தியர்களுக்கு குடிநீரை வழங்குகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இப்படி சத்தமில்லாமல் சாதிப்பதில் வல்லவரான நம்முடைய பாரதப் பிரதமர் மோடியை மிஞ்ச யாருமில்லை என்பதுதான் உண்மை!
மிக சரியாக சொன்னீர்கள்
தீவிரவாதம் தனது அடிப்படை தொழில் என்று நினைக்கும் பாகிஸ்தானை அடித்து உடைக்கவிட்டால் இந்தியா என்றும் தீவிரவாதத்தின் பிடியில்த்தான் இருக்கவேண்டும்.
பாக்கியின் கதறலும் திமுகவின் கதறலும் இன்பத்தேனாக வந்து காதினிலே பாய்கிறது.மேலும்
-
மஹாராஷ்டிரா மக்களின் சக்தி வாய்ந்த தீர்ப்பு: அண்ணாமலை
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்