பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு

5

கோல்கட்டா: பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்கு வங்கம் சிலிகுரி அருகே கோயில் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கோயிலுக்கான அடிக்கல்லையும் நாட்டி அவர் பேசினார். அப்போது கூறியதாவது;

பாஜ ஆளுகின்ற மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை செய்யப்படுகின்றனர். இங்கே மேற்கு வங்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்தவி தொந்தரவும் இன்றி அமைதியாக வாழ்கின்றனர்.

மற்ற மாநிலங்களில் மட்டும் வங்க மொழி பேசுபவர்கள் ஏன் குறி வைக்கப்படுகிறார்கள்? அசாம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், டில்லி, பீஹாரில் தாக்கப்படுகின்றனர்.

மக்களை தாக்குவது என்பது மதம் அல்ல, உயிர் கொடுப்பது தான் மதம். கடவுள் ஒருவரே என்று மகாத்மா காந்தி கூறி உள்ளார்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

Advertisement