பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
புதுடில்லி: சர்வதேச பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது எனக்கூறியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பொருளாதார பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஜப்பான் இடையேயான 18 வது பிராந்திய பேச்சுவார்த்தையின் போது ஜெய்சங்கர் பேசியதாவது: ஜப்பான் உடனான நட்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில், பொருளாதார உறவாக இருந்த உறவை, பரந்த, விரிவான மற்றும் முக்கியமான உறவாக மாற்றி உள்ளோம்.
நாம் வளர்ந்த ஜனநாயக நாடுகள். உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டவை. இன்று நமக்கு உலகத்தை வடிவமைக்க நமக்கு ஒரு வாய்ப்பு மட்டும் அல்ல. கடமையும், பொறுப்பும் உள்ளது.
தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலையில், நாம் இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியமானது. இன்று பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நமது இரு நாடுகளும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. நமது பொருளாதாரங்களில் உள்ள அபாயங்களை குறைப்பது எப்படி, சர்வதேசப் பொருளாதாரத்தில் உள்ள அபாயங்களைக் குறைப்பது எப்படி ஆகிய இரண்டும் மிக முக்கியமானவை.
இன்றைய நமது பேச்சுவார்த்தை என்பது மீள்திறன் கொண்ட விநியோக சங்கிலி, முக்கிய கனிமங்கள், எரிசக்தி ,சுகாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இருக்க வேண்டும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்