அல்வாவா, அபரிமிதமா?
எஸ்.கந்தசாமி,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு அலுவலர்கள்
மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான, 'ஜாக்டோ- - ஜியோ' தி.மு.க., ஆதரவாளர்களை
கொண்டது.
இச்சங்கம் தி.மு.க., ஆட்சியை எதிர்த்து, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது.
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் போராட்டம் அறிவித்தால், அதை வெற்றிகரமாக
நடத்தி முடித்து, தொழிலாளர்களுக்கு நீதி வாங்கித் தராமல் ஓயமாட்டார்கள்.
ஆனால், ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர் தான் ஆளுங்கட்சி அடிவருடிகள் ஆயிற்றே!
இவர்களாவது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாவது என்ற சந்தேகம்
இருந்தது. அதற்கேற்ப, தற்போது காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை,
'வாபஸ்' வாங்கியுள்ளது, ஜாக்டோ - ஜியோ.
'நான் அடிப்பது போல்
அடிக்கிறேன்; நீ அழுவது போல் அழு' என்பது போல், தேர்தல் நெருங்கும்
சமயங்களில் ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடத்துவதும், பேச்சு வார்த்தை நடத்தி,
சில கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் வாக்குறுதி கொடுத்து, ஆசிரியர் மற்றும்
அரசு ஊழியர்களின் ஓட்டுகளை அறுவடை செய்வது முன்னாள் முதல்வர்
கருணாநிதியின் தந்திரம்!
அதுதான் தற்போது நடந்துள்ளது.
போராட்டக்காரர்களை அழைத்து, பேச்சு வார்த்தை நடத்துவது போல நடத்தி,
'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்' என்ற பெயரில் அவர்களுக்கு, 'அல்வா'
கொடுத்துள்ளார், ஸ்டாலின்.
இத்திட்டம் எப்போது அமலுக்கு வரும் என தகவல் இல்லை.
தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில், ஏற்றுக்
கொள்ளப்பட்ட திட்டங்கள் அனைத்தும், 2026, ஜூலை மாதம் தான் அமலுக்கு வரும்
என்று கூறுகின்றனர்.
சட்டசபை தேர்தல் நடைபெறுவது வரை பிரச்னையை ஒத்தி வைத்தாயிற்று.
தி.மு.க., மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், வழக்கம் போல, 2021ல்
கொடுத்த வாக்குறுதிகளுக்கு என்ன கதி ஆனதோ, அதுதான் தற்போது கொடுத்துள்ள
உறுதி மொழிகளுக்கும் ஏற்படும். ஆட்சியில் அமரவில்லை என்றால், 'அடுத்து
வரும் ஆட்சியாளார்கள் பாடு, ஜாக்டோ - -ஜியோ பாடு' என்று சரியாக காய்
நகர்த்தியுள்ளது, தி.மு.க.,!
ஏமாற்றுவது தி.மு.க.,விற்கு கைவந்த கலை தானே!
பணமா, கொள்கையா?
ஏ.கே.பி.சோலைமலை, திருமங்கலம், மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், திருமங்கலம் என்ற பெயரைக் கேட்டாலே, இலவசங்களுக்காக விலை போன தொகுதி என்ற அவப்பெயர் இன்றளவும் உள்ளது.
காரணம், 2009ல் நடைபெற்ற ஓர் இடைத்தேர்தலில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி, வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தும், பல்வேறு இலவச பொருட்களை கொடுத்தும், அத்தேர்தலில், 40,000 ஓட்டு வித்தியாசத்தில் தன் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைத்தா ர்.
அதனாலேயே இன்றும், பணம் கொடுத்து குறுக்கு வழியில் வெற்றியடைவதை குறிக்க, 'திருமங்கலம் பார்முலா' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
இது எதையும் கண்டுகொள்ளாத இரு திராவிட கட்சிகளும், அதன்பின் வந்த தேர்தல்களில், வாக்காளர்களை ஈர்க்க, பரிசுப் பொருட்களை வழங்கின.
தொடர்ந்து இத்தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., இம்முறையும் தொகுதியை தக்க வைக்க நினைக்கிறது. தி.மு.க.,வோ திருமங்கலத்தை எப்படியேனும் வென்று விட வேண்டும் என்று, மகளிருக்கு சேலை மற்றும் எவர்சில்வர் பாத்திரம் வழங்கி வருகிறது. அ.தி.மு.க.,வும் பிளாஸ்டிக் வாளி மற்றும் சேலை வழங்குகிறது.
தொகுதியில் வளர்ச்சி பணிகளை செய்வதை விட, தேர்தல் நேரத்தில் இதுபோன்று இலவசமாக பொருட்களை கொடுத்து, எளிதாக வெற்றி பெற்று விடலாம் என இரு திராவிட கட்சிகளும் நினைக்கின்றன.
நாம் தமிழர் கட்சி தொண்டர்களோ, வீடு வீடாக சென்று தங்கள் கொள்கைகளை நேரடியாக மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்கின்றனர்.
பணம், பரிசு, இலவசம் என்பதற்குப் பதிலாக தமிழ் தேசியம், சுயமரியாதை, விவசாயம், நிலம், நீர், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை பிரச்னைகளை முன்னிறுத்தும் அவர்களின் அரசியல், மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
இதன் விளைவாக, இளைஞர்கள் மற்றும் இரு திராவிட கட்சிகளின் மீது அதிருப்தியில் உள்ளவர்கள் மத்தியில், நாம் தமிழர் கட்சி கணிசமான ஆதரவைப் பெற்று வருகிறது.
அதேநேரம், திருமங்கலம் தொகுதி மக்கள் இம்முறையும் பணத்திற்கு ஓட்டளிக்கப் போகின்றனரா அல்லது நாம் தமிழர் போன்ற கொள்கையை முன்னிறுத்தும் கட்சிக்கு ஓட்டளித்து, தங்கள் மீது விழுந்துள்ள கறையை துடைக்கப் போகின்றனரா என்பது, தேர்தல் முடிவுக்கு பின்பே தெரியும்!
உருதுக்காக உருகும் முதல்வர்!
எம்.கண்ணன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல் உடன்பிறப்புகள், பிரதமர் மோடியை வாய்க்கு வந்தபடி விமர்சித்து கிண்டலும், கேலியும் செய்வது போல, சமீபத்தில், ஜம்மு - -காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவியுமான மெஹ்பூபா முப்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினை கிண்டல் செய்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில், காஷ்மீரி மொழியில் பேசிய மெஹ்பூபா முப்தியை, பத்திரிகையாளர் ஒருவர், உருது மொழியில் பேச சொல்லவே வெகுண்டெழுந்து விட்டார், முப்தி.
'ஜம்மு- - காஷ்மீரில் எஞ்சியிருப்பது காஷ்மீரி மொழி மட்டுமே; இதையாவது நாம் பாதுகாக்க வேண்டும். என்னிடம் உருது பேச சொல்லி கட்டாயப்படுத்தும் நீங்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆங்கிலத்திலோ, உருது மொழியிலோ பேச சொல்லி கேட்பீர்களா?' என்று கேட்டுள்ளார்.
முத்தமிழ் வித்தகர் கருணாநிதியின் மகனும், திராவிட மாடல் முதல்வருமான ஸ்டாலினுக்கு, தமிழில் பேசுவது தான் தகராறு; துண்டுச் சீட்டு வைத்து படித்தாலும் ஒழுங்காக படிக்க வராது. ஆனால், திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் அத்துப்படி; அட்சரசுத்தமாக பேசுவார் .
அதிலும், உருது என்றால் கொள்ளைப் பிரியம். அதனால் தான் மாநிலம் முழுதும் அரசு சார்பில், உருது பள்ளிகளை திறந்து, அதில் பணியாற்றும் உபாத்தியாயர்களுக்கு அரசு கஜானாவிலிருந்து சம்பளம் கொடுத்து போஷித்து வருகிறார்.
எனவே, ஸ்டாலினுக்கு உருதில் பேசத் தெரியுமா என்று முப்தி ஏளனம் செய்ய வேண்டாம்; தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தினாலும், அவரது உதிரம் உருகுவது என்னவோ, உருதுக்குத் தான்!
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே, ‘யார் வருவார், என்ன கொடுப்பார்?’ என்று வழி மேல் விழி வைத்துப் பார்க்கும் கூட்டம் உள்ளவரை, நேர்மையான ஆட்சி, நியாயமான தேர்தல் என்று எதையும் எதிர்பார்க்க முடியாதுமேலும்
-
மேற்குவங்க இளைஞர் 18,000 கி.மீ., நடைபயணம்
-
'சைக்கிளிங்' சென்ற முதியவர் கார் மோதி உயிரிழப்பு
-
ஜாதி வாரி கணக்கெடுப்பு காங்., ஓ.பி.சி., அணி வலியுறுத்தல்
-
மாடக்கோட்டை பகுதியில் நெல் அறுவடை தீவிரம்
-
விஷம் குடித்து மீண்டவர் பாதாள சாக்கடை கிணற்றில் சடலமாக மீட்பு
-
ஹெத்தையம்மன் கோவிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்