மாடக்கோட்டை பகுதியில் நெல் அறுவடை தீவிரம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

செங்குடி, வரவணி, மஞ்சள்பட்டினம், மாடக்கோட்டை, வண்டல், விசவனுார், அளவிடங்கான் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மகசூல் நிலையை எட்டியதை தொடர்ந்து தற்போது அறுவடை பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருவதால் நெற்கதிர்களை மழைக்கு முன் அறுவடை செய்யும் விதமாக கூடுதல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அப்பகுதிகளில் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரப் படுத்தி உள்ளனர்.

Advertisement